இந்த நோயால எல்லாத்தையும் இழந்துட்டோ ம். எத்தனை அழிவு, எவ்வளவு இன்னல், நிம்மதி இல்லை, அழகு போச்சு, சந்தோசம் போச்சு. இனி ஒன்னும் பாக்கி இல்ல.
ஒவ்வொரு நாளும் இன்னைக்காவது இதுக்கு ஒரு விடிவு காலம் வராதான்னு ஏங்கியிருந்தோமே!
நல்லவேளை, நம்ம குடும்பத்துல என்ன மட்டும்தான் இந்த நோய் தாக்கியிருக்கு. ஆனா, இப்படியே போயிருந்தா ஒருத்தரையும் விட்டு வெச்சிருக்காது.
எந்த மருந்துக்கும் கட்டுப்படல. ஒவ்வொரு மருந்திலிருந்தும் எப்படி தப்பிக்கறதுன்னு சுலபமா கண்டுபிடிச்சு தப்பிச்சுருது பயங்கர புத்திசாலி. அதான் பயமே, அதோட கட்டுப்பாட்டுக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா
நம்மளயும் கொண்டு வந்துட்டு இருக்கு.
இது தாக்குனதுக்கு அப்புறம் எத்தனை கோடி தடவ சுத்தி வந்தாச்சு. இப்பத்தான் இதுக்கு ஒரு விடிவு காலம் வந்த மாதிரி தெரியுது.
கொஞ்சம் கொஞ்சமா பழைய நிலைமைக்கு திரும்பிட்டு இருக்கறதப் பாத்தா, இந்த நோய் அழிஞ்சிரும்னு நம்பிக்கை வந்திருச்சு.
மருந்து நல்லாத்தான் வேலை செய்யுது போல.
ஆமா, அது நம்ம புது மருந்துக்கு என்ன பேர் வெச்சிருக்கு?
கோவிட்-19
*******************
இவண்
புது நம்பிக்கையோடு பூமி