Thursday, November 14, 2013
Saturday, September 14, 2013
எனக்கு துரோகம் பண்ணிட்டா....
அது ஒரு சனிக்கிழமை. வாரவிடுமுறைகளில் பெரும்பாலும் ஊருக்குப் போய்விடுவேன். அன்றும் ஊரில் தான் இருந்தேன்.
நண்பர்களுடன் வழக்கமான அரட்டை. அரட்டை என்பதைவிட யாரையாவது கிண்டல் செய்வதுதான் அதிகம். அன்று எங்களுக்குக் கிடைத்த பலியாடு விமல். ஒரு பெண்ணிடம் காதலை சரியாக சொல்லமுடியாமல் சொதப்பியதை சொல்லி அவனை ஆளாளுக்கு கிண்டல் செய்து கொண்டிருந்தோம்.
நான் கொஞ்சம் ஓவராக கிண்டல் செய்துவிட்டேன். அவனுக்கு கோபம் வந்து, 'நீ பெரிய இவனா?. நீ நல்லா வாய்லயே வடை சுடுவன்னு தெரியும். முடிஞ்சா ஒரு பொண்ணுகிட்ட ஐ லவ் யூ சொல்லு பாக்கலாம்' என்றான்.
'எனக்கு பொண்ணுககிட்ட வழியறதெல்லாம் புடிக்காது'
'புடிக்காது இல்ல. தைரியம் இல்லன்னு சொல்லு'
'எனக்கு தைரியம் இல்லியா.. பார்ரா.. சொல்லுடா எவகிட்ட சொல்லணும்னு, நான் இப்பவே சொல்றேன்'
இருந்திருந்த வாக்குல, சட்டுன்னு தூரத்துல நடந்து வந்துகொண்டிருந்த பெண்களை காண்பித்து, 'அதா அதுல ஒசரமா செவப்பா வருதே அதுகிட்ட போய் சொல்லு' என்றான்
எனக்கு பயத்தில் வயிறு கலக்க ஆரம்பித்தது. வெளியே காட்டாமல், அவர்கள் நடந்து வரும் திசையை நோக்கி வேகமாக நடந்து போனேன்.
உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பித்தது. முன்னால் போய் நின்றபோது வாயிலிருந்து சத்தமே வரவில்லை. கொஞ்சமாக வெளிய வந்த சத்தத்தில், 'நில்லு' என்றேன் அவளைப் பார்த்து.
அவர்கள் நான்கு பேர் இருந்தனர். நாலு பேரும் அப்படியே நின்றனர்.
'எனக்கு உன்னப் புடிச்சிருக்கு. ஐ லவ் யூ' என்று சொல்லிவிட்டு அவள் முகத்தைக் கூட பார்க்காமல் ஓடிவந்து விட்டேன்.
'என்னது அண்ணனுக்கு இப்படி வேர்த்திருக்கு, இப்பத் தெரியுதா?. என்ன மணி எவ்வளவுன்னு கேட்டுட்டு வந்தியா?' என்றான் விமல்
'உன்ன மாதிரி பயந்தான்கொள்ளி இல்ல நான். நான் என்ன சொன்னேன்னு தைரியமிருந்தா அவகிட்டயே போய் கேட்டுக்க'
இப்படியே மாறிமாறி சண்டை போட்டு அன்றைய பொழுதைக் கழித்தோம்.
அந்தப் பெண் என்னைப் பற்றி என்ன நினைத்திருக்கும், வீட்டில் யாரிடமாவது சொல்லி இருக்குமா என்றெல்லாம் நான் நினைக்கவேயில்லை. என்னுடைய ஒரே நோக்கம் நண்பர்கள் முன்பு நான் தைரியமானவன் என்று நிரூபிக்கவேண்டும். 'உண்மையிலேயே அவனுக என்னை தைரியமானவன்னு நெனச்சிருப்பாங்களா, இல்லன்னா நான் பயந்தது அவனுகளுக்குப் புரிஞ்சிருக்குமா' இதுமாதிரியான சிந்தனைகள் மட்டுமே என் மனதில் ஓடிக் கொண்டிருந்தன.
சில வாரங்களுக்குப் பிறகு தங்கச்சிகளுக்கு யூனிஃபார்ம் வாங்க தென்றல் சில்க்ஸிற்கு சென்றிருந்தோம். அங்கு அந்தப் பெண்ணை மீண்டும் பார்த்தேன். பார்த்ததுமே பயம் தொற்றிக் கொண்டது. அவங்க அப்பாகிட்ட சொல்லி, எங்க அப்பாட்ட வந்து சண்டைப் போட்டுருவாரோன்னு பயம்.
நான் பயந்தது போல் ஒன்றும் நடக்கவில்லை. அந்தப் பெண்ணிற்கு என்னைப் பார்த்தவுடன் அடக்கமுடியாத சிரிப்பு. கூட வந்திருந்த பெண்ணிடம் என்னமோ காதில் சொல்ல, அந்தப் பெண்ணும் என்னைப் பார்த்து சிரித்தது.
கோமாளியாக்கிட்டாங்களேன்னு மனசுக்குள்ள சின்ன வருத்தம் இருந்தாலும் வெளிய காமிக்காம இருக்க ட்ரை பண்ணினேன்.
மூன்றாவது முறையாக அந்தப் பெண்ணைப் பார்த்தது கோட்டூர் பஸ் ஸ்டாண்டில். அங்குதான் முதன்முதலாக அந்தப் பெண்ணைப் பார்த்ததுவும்.
நல்ல மழை, எல்லோரும் வேகவேகமாக ஓடி கடைகளுக்கு முன்பு உள்ள கூரைகளுக்குள் போய் நின்றனர். நான் மட்டும் மழையை ஒரு பொருட்டாக எண்ணவில்லை என்பதைக் காண்பிக்கும் விதமாக மெதுவாக நடந்து போய் நின்றேன்.
என்னைப் பார்த்ததும் அந்தப் பெண்ணிற்கு என்ன செய்வதென்றே தெரியாமல் தன தோழியிடம் என்னென்னமோ சொல்லிக் கொண்டிருந்தாள்.
அடுத்து வந்த பஸ்ஸில் எல்லோரும் ஏறினர். மழையிலும் ஃபுட்போர்ட் அடித்து அந்தப் பெண்ணிற்கு என்னுடைய வீர தீரங்களை காண்பிக்க நினைத்தேன். ஆனால் அந்தப் பெண் அந்த பஸ்ஸில் ஏறவில்லை. நானும் இறங்கிவிட்டேன்
எங்க மூன்று பேரைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற தைரியத்தில் அந்தப் பெண்ணிடம், 'பேரென்ன?' என்றேன்.
'மெர்லின்'
'ம்ம்'
'உங்க பேர்'
'ப்ரவீண்'
'எந்த காலேஜ்''
'என் ஜி எம்ல, செகண்ட் இயர் பீ காம்.... நீங்'
'பீஎஸ்ஜி, ஃபைனல் இயர் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி'
'வீடு எங்க'
'என்.ஜி.ஜி.ஓ காலனி'
'நான் ரங்க சமுத்திரம்'
அதற்குள் பஸ் வந்துவிட்டது. அந்தப் பெண்ணை பார்ப்பதற்காக, ஃபுட்போர்ட்டில் நிக்காமல் உள்ளே சென்றேன்.
அடுத்த சில வாரங்கள் டைம் கீப்பர் வேலை பார்த்தேன். ஞாயிற்றுக் கிழமைகளில் சர்ச்சிற்கு போற நேரம், சனிக் கிழமைகளில் காலேஜிற்கு போற நேரம் என்று எல்லாம் சரியாக நோட் பண்ணித் தொடர ஆரம்பித்தேன். நண்பர்களுக்கு இந்த விஷயத்தை சொல்லவில்லை. சக்ஸஸ் ஆனதற்குப் பிறகு சொல்லிக்கலாம் என்று விட்டுவிட்டேன்.
அந்தப் பெண்ணை சந்திக்கப் போகும் முன், ஒவ்வொருமுறையும் பல நிமிடங்கள் கண்ணாடி முன் விரையம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தேன் //விஜய பாஸ்கர், நீங்க சொன்னது இது மாதிரி தானே//
சில சந்திப்புகளுக்குப் பிறகு மீண்டும் காதலை சொன்னேன்.
'என்னன்னு தெரியல, உன்னப் பாக்காம இருக்கமுடியல. வீட்டுலயும் சரி, காலேஜ்லயும் சரி எப்பவுமே உன் ஞாபகம் தான். எந்த ஹீரோயினப் பாத்தாலும் உன்ன மாதிரியே தெரியுது.எப்படி சொல்றதுன்னு தெரியல. எனக்கு நீ வேணும். கடைசிவர நாம ஒண்ணா வாழனும்'
'எனக்கும் உன்னப் புடிக்கும். நீ ரொம்ப நல்லவன். ஆனா நீங்க வேற மதம், நாங்க வேற மதம். அத நெனைக்கும்போதுதான் பயமா இருக்கு'
'இதெல்லாம் ஒரு விஷயமா?. நீ உனக்குப் புடிச்ச சாமிய கும்பிட்டுக்கோ. நான் எனக்குப் புடிச்ச சாமிய கும்பிட்டுக்கறேன்'
'நம்மளப் பத்தி சொல்லல. நம்ம குடும்பத்துல உள்ளவங்களப் பத்தித்தான் எனக்கு கவலை'
'அதப் பத்தி கவலைப்படாத, அதெல்லாம் சமாளிச்சுக்கலாம்'
அப்படியாக நாங்க காதலிக்க ஆரம்பித்தோம். இடையிடையே சில ஊடல்கள் வந்தாலும், ரெண்டு வருஷம் தொடர்ந்து காதலித்தோம்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு...
நான் மடத்துக்குளத்தில் ஒரு பேப்பர் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தேன். மெர்லின் வேலைக்கு ஒன்றும் செல்லவில்லை. அவங்க வீட்டில் வரன் தேடும் பணியில் தீவிரமாக இறங்கியிருந்தார்கள்.
இதற்கு மேலும், தள்ளிப்போட முடியாது என்பதால் வீட்டில் அப்பாவிடம் விஷயத்தை சொன்னேன். அப்பா, முடியாது என்று ஆணித்தரமாக சொல்லிவிட்டார்.
'ஒன்னு பண்ணு, உன் தங்கச்சிக ரெண்டு பேரையும் மண்ணெண்ணெய் ஊத்தி கொளுத்திரு. அதுக்கு அப்புறம் நீ யார வேணும்னாலும் கட்டிக்கோ'
அம்மாவிடம் சொன்னேன். நான் என்ன சொன்னாலும் கேட்கும் அம்மாவும், இதில் எனக்கு ஆதரவாக இல்லை.
ஒருமுறை மெர்லினை வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். வீட்டில் யாருமே சரியாக பேசவில்லை. தங்கச்சிகளுக்கு பேசவேண்டும் என்று ஆசை இருந்தாலும் பயந்துகொண்டு பேசவில்லை.
வீட்டிற்கு வந்த பிறகு மெர்லின் நம்பிக்கையை இழந்துவிட்டாள்.
'இனி நாம என்ன செய்யலாம்னு சொல்லு'
'கொஞ்ச நாள் வெயிட் பண்ணலாம். எல்லாம் சரி ஆயிரும்'
'எவ்வளவு நாள்ன்னு சொல்லு. ஒரு மாசமா, ஒரு வருஷமா இல்ல பத்து வருஷமா'
'தங்கச்சிகள நெனச்சுத்தான் வீட்டுல பயப்படறாங்க'
'உன்னோட ரெண்டாவது தங்கச்சிக்கு கல்யாணம் ஆக இன்னும் கொறஞ்சது அஞ்சு வருஷம் ஆகும். அதுவரைக்கும் காத்து இருக்கணும்னு சொல்றியா'
'அப்படி இல்ல. வீட்டுல உள்ளவங்கள எதித்து ஒன்னும் பண்ணமுடியாது. அதான்'
'எங்க வீட்டுல எனக்கு ஒருவாரம் டைம் குடுத்திருக்காங்க. நேத்து வந்து பாத்திட்டுப் போன அந்த குடுமபத்தை எங்க அப்பா அம்மாவுக்கு ரொம்ப பிடிச்சுப் போயிருச்சு. வர்ற வெள்ளிக்கிழமைக்குள்ள நான் அவங்களுக்கு பதில் சொல்லணும். அதுக்கு தகுந்த மாதிரி அவங்க மாப்பிள வீட்டுல சொல்லுவாங்க. மாப்பிள ரெண்டு மாசத்துல அமேரிக்கால இருந்து வர்றார். வந்தா உடனே கல்யாணம் வெச்சுக்கணும்னு சொல்றாங்க'
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. 'சரி, எனக்கு வியாழக்கிழமை வரை டைம் தா. அதுக்குள்ளே நான் ஒரு முடிவு சொல்றேன்' என்றேன்.
எப்படி யோசித்தாலும் என்னால் எங்க குடும்பத்தில் உள்ளவர்களை விட்டுவிட்டு கல்யாணம் செய்ய மனமில்லை. பலமுறை யோசித்த பிறகு வியாழக்கிழமை மெர்லினுக்கு ஃபோன் பண்ணினேன்.
'எனக்கென்னமோ, நீ அவரை கல்யாணம் பண்றதுதான் நல்லதுன்னு தோணுது'
'இதுக்குத்தான் ரெண்டு வருஷம் காதலிச்சோமா. நான் ஆரம்பத்துலயே சொல்லல. நீதான் சமாளிச்சுக்கலாம்னு சொன்ன. இப்ப எவ்வளவு ஈசியா சொல்ற'
'இல்ல, என்னோட சிச்சுவேஷனப் புரிஞ்சுக்கோ'
'ஒரு வார்த்த சொல்லு. நாளைக்கே நான் பெட்டி படுக்கையோட உங்க வீட்டுக்கு வந்துர்றேன்.'
'வேண்டாம், மெர்லி... நாம பிரிஞ்சிரலாம்'
ஒன்றும் பேசாமல் மெர்லின் ஃபோனை வைத்துவிட்டாள்.
ஒரு வாரம் நான் ஃபோன் பண்ணவே இல்லை. ஒரு வாரத்திற்குப் பிறகு ஃபோன் பண்ணினேன்.
'தயவு செஞ்சு இனி என்னக் கூப்பிடாத. நான் உன்ன மறந்துட்டேன். ரெண்டு நாளா அவர் என்கூட ஃபோன்ல பேசறார். உன்கூட இனி பேசுனா அது அவருக்கு செய்யற துரோகம் ஆய்விடும். ப்ளீஸ் இனி ஃபோன் பண்ணாத'
ஃபோனை வைத்துவிட்டு கதறி அழுதேன். என்னால் அந்த வார்த்தைகளை தாங்கமுடியவில்லை. அடுத்த பத்து நாட்கள் நரகமாக இருந்தது. பத்து நாட்களுக்குப் பிறகு மெர்லினின் ஃபோன் வந்தது. எடுக்கவில்லை. இருபத்தைந்து மிஸ்ஸுட் கால். எடுக்கவில்லை. கடையிசில் எடுத்தேன்.
'ஏன் ஃபோன் எடுக்கல?'
'நீ தான இனி உன்கூட பேசக் கூடாதுன்னு சொன்ன'
'ஆமா, அதுக்காக இத்தன தடவ கால் பண்ணியும் எடுக்கலியே. வேற எவளாவது கெடச்சுட்டாளா? அதான் மறந்துட்டியா?'
'இல்ல, மெர்லி.. என்னால உன்ன மறக்க முடியல. நான் வேற பொண்ண மனசுலகூட நெனச்சுப் பாக்கல. வாரத்துக்கு ஒரு தடவையாவது கால் பண்ணு ப்ளீஸ்'
'சீக்கரமே, ஒரு நல்ல பொண்ணாப் பாத்து கல்யாணம் முடிச்சுக்கோ. எல்லாம் சரியாயிரும்.கல்யாணப் பத்திரிகை அடிக்க குடுத்தாச்சு. வந்தா அனுப்பி வைக்குறேன்' என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டாள்.
அதற்குப் பிறகு ஃபோன் வரவேயில்லை. எங்கு சென்றாலும் அவள் ஞாபகம் என்னைக் கொன்றது. ஊருக்கு சென்றால் ஒவ்வொரு இடத்தையும் பார்க்கும்போது, அந்த இடங்களில் நாங்கள் ஒன்றாக சுற்றியது ஞாபகம் வந்தது. வேலையில், யாரையாவது பார்க்கும்போது சென்றமுறை இவரைப் பார்த்தபோது நாங்க காதலிச்சிட்டு இருந்தோமே என்ற எண்ணம் வந்து மனது வலித்தது.
சோகத்தில் தாடி வளர்த்தாலும், தண்ணி அடிக்க மனம் வரவில்லை. இதுவரை தண்ணியடித்ததே இல்லை என்பதால் அதற்கு மனம் ஒத்துழைக்கவில்லை. சினிமாவிற்குப் போனேன், பாடல்கள் கேட்டேன், ஊர் சுற்றினேன். ஆனால் பலன் ஒன்றும் இல்லை. என்னால் அதை விட்டு வெளியே வரமுடியவில்லை.
அவருடைய பெயர் ஆல்வின் என்று சொல்லியிருந்தாள். ஊர் கோயம்பத்தூர். அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இரண்டு நாள் கோயம்பத்தூரில் ஒவ்வொரு இவேஞ்சலிக்கல் சர்ச் ஆகப் போய் விசாரித்தேன். அவர் மோசமானவர் என்று தெரிந்தால் மெர்லினை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்றெல்லாம் மனதில் எண்ணங்கள் ஓடின. அவரைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.
கடைசியில் கல்யாணத் தேதியை ஒரு நண்பன் மூலம் தெரிந்து கொண்டேன். கல்யாணத்திற்கு செல்கின்ற அளவிற்கு எனக்கு தைரியம் இல்லை. ஆகையால் மடத்துக்குளத்திலே இருந்துவிட்டேன். கல்யாணத்திற்கு முதல்நாள் விமலிடம் இருந்து ஃபோன் வந்தது.
'மாப்பிள்ளையைப் பாத்தேண்டா. ஜாலியா பேசறார். சூப்பரா இருக்கார். இன்னைக்கு பொள்ளாச்சிலதான் தங்கியிருக்கிறார். சக்தி ஹோட்டல்ல'
அவனிடம் அதிகம் பேசாமல் ஃபோனை கட் பண்ணினேன்.
என்னைவிட அழகான நல்ல வசதியான மாப்பிளை கிடைத்ததால்தான் என்னைத் தூக்கி எரிந்திருக்கிறாள். இந்தப் பெண்களே இப்படித்தான். இதுல அவருக்கு துரோகம் பண்ண விருப்பம் இல்லியாம், என்கூட ஊர் சுத்தும்போது தெரியலியாம். ச்சீ நீ எல்லாம் பொம்பளையா. அவள் எனக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை, அந்த அப்பாவியையும் ஏமாத்தப் போகிறாளே.
உணர்ச்சிகளின் கொந்தளிப்பைத் தாங்கமுடியாமல் பொள்ளாச்சிக்கு கிளம்பினேன்.
சக்தி ஹோட்டலில் ராத்திரி 12 மணிக்கு ஆல்வினை பார்த்துப் பேசினேன். நாங்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட ஃபோட்டோக்கள், அவள் எனக்கு அனுப்பிய மெசேஜ்கள் எல்லாவற்றையும் அவரிடம் காண்பித்துவிட்டு கடைசியாக, 'சார், உங்க நல்ல மனசுக்கு இவளைவிட நல்ல பொண்ணு கிடைக்கும்' என்று சொல்லிவிட்டு வந்தேன்.
ராத்திரியே மடத்துக்குளம் திரும்பப் போய்விட்டேன். அன்று இரவு நிம்மதியாகத் தூங்கினேன்.

காலை தங்கையிடம் இருந்து ஃபோன் , "அண்ணா, அந்த அக்கா எறந்திருச்சுண்ணா. கல்யாணத்துல இஷ்டம் இல்லாம தற்கொலை பண்ணிக்கிச்சுண்ணா.
அந்த அக்கா எறந்ததுக்கு நம்ம அப்பாவும் அம்மாவும்தான் காரணம். அண்ணா, நீ
எதுவும் பண்ணிக்காதண்ணா. எங்களுக்கு உன்ன விட்டா யாரும் இல்லைண்ணா' என்றார் அழுதுகொண்டே...
********************
பிகு: பல
ஆண்கள் இதுபோன்ற சமயங்களில் நிலைதடுமாறி இப்படி பழிவாங்கும் எண்ணத்தில்
செயல்பட்டு காதலித்தவளின் வாழ்க்கையைக் கெடுத்து, தமது நிம்மதியையும்
இழந்துவிடுகிறார்கள். விட்டுக்கொடுத்திருந்தால் வாழ்நாள் முழுவதும்
பெருமிதத்தோடு இருக்கலாம் என்பதை அவர்களால் அந்தத் தருணத்தில் உணரமுடிவதில்லை
ஜாலியா ஒரு போஸ்ட்
'என்னடா ஆச்சு உனக்கு? ஏன்டா இப்படி இருக்கற?'
'ஒன்னும் ஆகலியே, நான் நல்லாத்தான் இருக்கேன்'
'என்னடா ப்ராப்ளம், ப்ளீஸ் ஸ்பீக் அவுட்'
'எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல, நீதான் என்ன அவாய்ட் பண்ற'
'நானா? நான் எதுக்கு உன்ன அவாய்ட் பண்ணனும்? தெளிவா சொல்லு'
'போன வாரத்துல நான் மொத்தம் இருபது ஸ்டேட்டஸ் போட்டுருந்தேன், ஆனா நீ ஒரே ஒரு ஸ்டேட்டஸுக்கு மட்டும்தான் லைக் பண்ணிருந்த'
'டேய், இதெல்லாம் ஒரு விஷயமா. நான் இப்பெல்லாம் ஃபேஸ்புக் அவ்வளவா பாக்கறது இல்ல, அதான்'
'பொய் சொல்லாதடீ.. எனக்கு எல்லாம் தெரியும். அவ்வளவா பாக்காமயா ராஜா போட்டிருந்த பத்து ஸ்டேட்டஸுக்கு லைக் பண்ணிருந்த. அக்ரமோட மூணு ஸ்டேட்டஸுக்கு லைக் பண்ணிருந்த. அவினாஷ் போட்டிருந்த ஏழு ஸ்டேட்டஸுக்கு லைக் பண்ணுன. ஏன், மாங்கா மாமா போட்டிருந்த முப்பத்தஞ்சு ஸ்டேட்டஸுக்கு லைக் பண்ணிருந்தியே.. அதுல மூணு ஸ்டேட்டஸ்ல கமெண்ட் வேற போட்டிருந்த.. இப்ப சொல்லு இதுதான் நீ அதிகமா ஃபேஸ்புக் பாக்காததா'
'இத இப்ப ஏன் ஒரு விஷயமாக்கறன்னுதான் புரியல'
'உனக்கு புரியாது. மத்த பசங்க மாதிரி நான் சந்தேகப்படறவனா இருந்திருந்தா இந்நேரம் உன்ன வேவு பாத்திருப்பேன். நான் கேசுவலா எடுத்துக்கிட்டேன் இல்லியா. அதான் உனக்கு எளக்காரமாப் போச்சு'
'இந்த மாதிரி சில்லி திங்க்ஸ்கெல்லாம் பிரச்சனை பண்ணாதடா'
'எதுடீ சில்லி திங். என்ன நீ அவாய்ட் பண்ணுவ. நான் பொறுமையா இருக்கணுமாக்கும். நீ லைக் பண்ணுன என்னோட அந்த ஸ்டேட்டஸையும் படிச்சிருக்க மாட்டன்னு எனக்கு நல்லாத் தெரியும்'
'இல்ல படிச்சிட்டுத்தான் லைக் பண்ணுனேன்'
'பொய் சொல்லாத. அது என்ன ஸ்டேட்டஸ்ன்னு சொல்லு பாக்கலாம்'
'உங்க அம்மாவப் பத்தி எழுதிருந்த'
'பாத்தியா.. எங்க அம்மா இல்லடி அது, முதல்வரைப் பத்தி எழுதிருந்தேன். டைட்டில் அம்மாங்கறத மட்டும் படிச்சிருக்கற'
'தெரியும். நாங்க கலைஞர் கட்சி. அதான் உங்க அம்மான்னு சொன்னேன்'
'சமாளிக்காத. உனக்கு என் ஸ்டேட்டஸ் படிக்கறதுல என்ன பிரச்சனைன்னு தெரியல. என்ன வெறுக்க ஆரம்பிச்சுட்டேங்கறது மட்டும் நல்லாத் தெரியுது'
'டேய், உண்மைய சொல்லணும்னா, நீ எழுதற ஸ்டேட்டஸ் எதுவுமே படிக்கற மாதிரி இல்லடா. அதுவும் நீ எழுதற என்னமோ ஒரு குறுங்கதைகள் இல்ல... அது கன்றாவியா இருக்குதுடா'
'கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை. க்ரியேடிவா எழுதுனா உங்களுக்குப் புடிக்காதே. நம்ம 'பின்னால் மின்னல் எழுத்தாளர் மருதநாயகம்' என்னோட ரெண்டு கதைய அவர் ப்ளாக்ல போட்டு அது அமெரிக்க எழுத்தாளர் டொனால்ட் டக் எழுதற மாதிரியே இருக்குன்னு பாராட்டியிருக்கறார். இதெல்லாம் உனக்கு எங்க தெரியப் போகுது'
'அந்த ஆளுக்கு ஒரு பீடிக் கட்டு வாங்கிக் குடுத்தா போதுமே, உனக்கு புக்கர் பரிசே வாங்கிக் குடுத்துருவாரே'
'சும்மா நிறுத்து. என்னோட ஒவ்வொரு ஸ்டேட்டஸையும் கொறஞ்சது நாலு பேராவது ஷேர் பண்றாங்க. தெரியுமா உனக்கு'
'என்னடா நீ சொல்ல வர்ற'
'நீ இன்னும் என்ன புரிஞ்சுக்கலடீ. என்னப் பத்தி உனக்கு என்ன தெரியும். என்னோட அக்கௌன்ட் ஒப்பன் பண்ணிப் பாரு புரியும். யூசர் நேம் P A A M B A T T I பாம்பாட்டி டாட் S I T H A N சித்தன் அட் ஜிமெயில் டாட் காம், பாஸ்வோர்ட் U M அட் M A G E S H W A R அட் N'
'எனக்கு இது தெரியும்'
'ரூமுக்குப் போய் ஒப்பன் பண்ணிப் பாரு, நாலு பொண்ணுங்க எனக்கு மெசேஜ் அனுப்பிருப்பாங்க. நான் யாருக்குமே ரிப்ளை பண்ணலியே. இத்தனைக்கும் அவங்க யாருமே அப்படி வழியற கேஸுக இல்ல. அவங்க ப்ரொஃபைல் ஃபுல்லி செக்யூர்ட். அவங்க ஃப்ரண்ட்ஸ் யார் யாருன்னு கூட பாக்கமுடியாது. ஏய், அதுல ஒரு பொண்ணு பத்தாம் க்ளாஸ்தாண்டி படிக்குது. சின்னப் பொண்ணுடி. நான் என்ன அவ்வளவு கேவலமானவா? புரிஞ்சுக்கோ'
'இத ஏன்டா என்ட்ட சொல்ற. தேவை இல்லாம இப்ப இமோஷனல் ஏன் ஆகற.'
'இல்ல. எனக்கு என்ன நிரூபிக்கறதுக்கு வேற வழி தெரியல'
'நீ எதுக்கு நிரூபிக்கணும். நான் உன்ன ஒன்னும் கேக்கலியே'
'நீ சந்தேகப்பட்டறக் கூடாது இல்லியா, அதான்'
'ஓ அப்படி. அப்புறம் எதுக்கு நாலு நாளைக்கு முன்னாடி காவ்யாகிட்ட, ஒரே நாள்ல வழிய வழியப் போய் உன் நம்பரக் குடுத்த. அந்த சேட்டை டிலீட் வேற பண்ணீட்ட. அந்த காவ்யா என்னோட ஃப்ரண்ட் தான் தெரியுமா? '
'எந்த காவ்யா? ஓகே ஓகே. அந்தப் பொண்ணு ரொம்ப டீசண்டா தெரிஞ்சது அதனால தான் குடுத்தேன். ஷீ இஸ் ரியலி டீசண்ட் யூ நோ?'
'அவ டீசண்ட் தான். ஆமா, உனக்கு மெசேஜ் அனுப்புன அந்த நாலு பொண்ணுங்கதான உன்னோட ஸ்டேட்டஸ் எல்லாம் ஒன்னு விடாம ஷேர் பண்ணுதுங்க'
'ஆமாம். ஓ அவங்க ப்ரொஃபைல்ல போய் செக்கிங் நடந்துருக்கோ. இப்பவாவது என்னப் புரிஞ்சுக்கோ'
'ஃபேக் ஐடிகளக் கூட புத்திசாலித்தனமா வெச்சுக்க தெரியல, நீ க்ரியேடிவிட்டி பத்தி பேசற. அது எப்படி அந்த பொண்ணுங்க நாலு பேரும் சொல்லி வெச்ச மாதிரி வேற எதையும் போஸ்ட் பண்ணாம உன்னோட ஸ்டேட்டஸ்ஸ மட்டும் ப்ரொஃபைல் ஆரம்பிச்சதில இருந்து ஷேர் பண்ணிட்டு இருக்காங்க.'
'உனக்கு ரொம்ப புத்திசாலின்னு நெனப்போ... அவங்க வேற ஸ்டேட்டஸும் போடறாங்க. பட் , ஒன்லி ஃப்ரண்ட்ஸ்தான் பாக்கமுடியும்.'
'நீ அவங்களுக்கு ஃப்ரண்ட் தான. நான் பாத்தது உன்னோட ப்ரொஃபைல்ல இருந்துதான். அப்புறம் இன்னொரு விஷயம். காவ்யா என்னோட ஃபேக் ஐடிதான், சோ நீ எப்படி வழிவேன்னும் எனக்கு நல்லாத் தெரியும்'
****************************** ****************************** **
பின்குறிப்பு: கமெண்ட்ல யாராவது 'இதுல ஏதாவது உங்க சொந்த அனுபவத்தோட பாதிப்பா'ன்னு கேட்டு என் பொண்டாட்டிய ஜெயிலுக்கு அனுப்பிறாதீங்க.

******************************
பின்குறிப்பு: கமெண்ட்ல யாராவது 'இதுல ஏதாவது உங்க சொந்த அனுபவத்தோட பாதிப்பா'ன்னு கேட்டு என் பொண்டாட்டிய ஜெயிலுக்கு அனுப்பிறாதீங்க.
தம்மைத் தரம் தாழ்த்திய ஆசிரியர்....
தம்மைத் தரம் தாழ்த்திய ஆசிரியர்....
கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறையில்தான் நான் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். வால்பாறை அரசு மேல்/உயர்நிலைப் பள்ளி. அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பத்து சதவீதம் மாணவர்கள் பாஸாவதே பெரிய விஷயமாக இருந்தது அன்று. ஒன்பதாம் வகுப்புவரை எப்படியோ கஷ்டப்பட்டு எல்லாப் பாடங்களிலும் பாஸாகி வந்தேன்.
பத்தாம் வகுப்பு போனபோது 'எப்படிடா பாஸ் பண்ணப் போகிறோம்' என்று மனதில் பெரிய கவலை இருந்தது. குறிப்பாக கணக்குப் பாடத்தை நினைக்கும்போது தான் அதிக பயம். நான் படித்தது 'B' section- ல். 'A' section ஆக இருந்தால் எப்படியும் பாஸ் பண்ணிவிடலாம். காரணம் அண்ணாமலை சார், அவர்தான் அந்த section -க்கு கணக்கு ஆசிரியர். அவர் எல்லா மாணவர்களையும் அடித்துப் படிக்க வைத்து பாஸ் பண்ண வைத்துவிடுவார். அவர் 35 மார்க்குகளுக்கு மட்டுமே பாடம் சொல்லிக்கொடுப்பார்.
B section-க்கு ஒரு டீச்சர், அவங்க பேர் மறந்து போச்சு. ரொம்ப அழகா இருப்பாங்க. எங்க கெட்ட(?) நேரம் அந்த வருஷம் அவங்களை வேற section -க்கு மாத்திட்டாங்க. அவருக்கு பதிலாக பொன்னுசாமி சாரை நியமித்திருந்தார்கள். பொன்னுசாமி சாரைப் பத்தி எங்க சீனியர்ஸ் யாரும் பெரிதாக ஒன்றும் சொன்னது கிடையாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கணக்கு வகுப்பிற்காகக் காத்திருந்தோம்.
அவர் எங்களிடம் கேட்ட முதல் கேள்வி, "எந்த subject உங்களுக்கு ரொம்ப கஷ்டம்?"
எல்லோரும் கோரஸாக "maths (மேக்ஸ் என்று படிக்கவும், அப்பொழுது மேத்ஸ் என்று சொல்லவேண்டும் என்று தெரியாது)" என்றோம்.
"அப்படியா" என்று கேட்டுவிட்டு போர்டில் 10 கணக்குகளை எழுதி எங்களிடம் விடை எழுதுமாறு சொன்னார்.
அன்று பெரும்பாலோனோர் 7 மார்க்குகளுக்கு அதிகமாக எடுத்திருந்தோம் (மொத்தம் பத்து மார்க்குகள்).
"எல்லாரும் நல்ல மார்க் வாங்கி இருக்கீங்களே, உங்களுக்கு maths கஷ்டம் என்பதை நம்ப முடியவில்லை" என்றார்
அவரது வகுப்புகள் ஒவ்வொன்றும் மிகவும் இண்டரெஸ்டிங் ஆக இருக்கும். ஒவ்வொரு பாடத்தையும் அதன் பயன்பாட்டிலிருந்து ஆரம்பிப்பதுதான் அதற்குக் காரணம். அதாவது முதலில் அந்த கணக்கு வாழ்க்கையில் எங்கே பயன்படும் என்று சொல்லிவிட்டு தான் பாடத்தை நடத்துவார். புரிந்து படித்தல் என்பதை அப்பொழுதுதான் முதன் முதலில் கத்துக்கொண்டேன் (அதுதான் புரிந்து படிக்கறதுன்னு அப்போது தெரியாது)
பொன்னுசாமி சார் எப்பொழுதும் அவருடைய பழைய மாணவர் இப்ராஹீமைப் பற்றி சொல்லிக் கொண்டே இருப்பார். 20 வருடங்களுக்கு முன்பு அவரிடம் படித்த மாணவர் இப்ராஹிம். அவர் கணக்குப் பாடத்தில் 90 மதிப்பெண்கள் வாங்கியிருந்ததுதான் அதுவரை அந்தப் பள்ளியில் சாதனை. பொன்னுசாமி சார் அவரைப் பற்றி அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்ததால், எங்க எல்லோருக்கும் எப்படியாவது இப்ராஹீம் போல நாமும் படிக்கவேண்டும் என்ற ஆசை எப்போதுமே இருந்து வந்தது.
காலாண்டுப் பரீட்சை வந்தது. கணக்கில் நல்ல மார்க் வாங்குவேன் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. பரீட்சை முடிந்து ஒவ்வொரு பாடத்தின் மதிப்பெண்களும் கொடுக்க ஆரம்பித்தார்கள். ஆவலுடன் எதிர்பார்த்த கணக்குப் பரீட்சை மார்க் கிடைத்தது, 92 மதிப்பெண்கள் வாங்கியிருந்தேன். அன்று வரை என் வாழ்க்கையில் அவ்வளவு சந்தோசம் அடைந்தது கிடையாது. அந்த முகம் தெரியாத இப்ராஹிமை விட அதிக மதிப்பெண்கள் வாங்கிவிட்ட சந்தோசம். எப்படியாவது பொதுத்தேர்வில் அதைவிட அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டு என்று மனதில் நினைத்துக் கொண்டேன். ஆனால் என்னுடன் படித்த மற்ற மாணவர்கள் யாரும் அவ்வளவு மார்க் வாங்கவில்லை. இருந்தாலும் பொன்னுசாமி சாருக்கு நான் நல்ல மதிப்பெண் வாங்கியதால் ரொம்ப சந்தோசம்.
அரையாண்டுத் தேர்வுக்கு முன்பு எல்லாப் பாடங்களையும் முடித்துவிட்டார். அதில் நான் 99 மதிப்பெண்கள் வாங்கியிருந்தேன். என்னைவிட அதிகம் சந்தோஷப்பட்டது பொன்னுசாமி சார்தான். பேப்பரைக் கொடுத்து முடித்தபின் என்னை வெளியே அழைத்துச் சென்றார்.
அங்கு என்னிடம் அவர், 'ப்ரவிண், நீ எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும்' என்றார்.
'என்ன சார்?' என்று கேட்டேன்.
'நாளையிலிருந்து நீதான் க்ளாஸ் எடுக்க வேண்டும்'
'ஓகே சார்'
'நான் சும்மா இருக்கலாம்ன்னு நெனச்சுட்டு உன்ன க்ளாஸ் எடுக்க சொல்லல. நீ க்ளாஸ் எடுத்தால் உனக்கு எல்லாப் பாடங்களும் தெளிவாகிவிடும். அதுமட்டுமில்லாமல் உன்னோட க்ளாஸ்மேட்ஸ் உன்னிடம் தைரியமாக சந்தேகம் கேட்பார்கள்'
'சரி சார்'
'உனக்குப் பிரச்சனை ஒன்னும் இல்லியே? விருப்பம் இல்லைன்னா வேண்டாம்',
'இல்லை சார், எனக்கு சந்தோசம் தான்'
அன்றிலிருந்து அந்த வருட கடைசி வரை நான் தான் க்ளாஸ் எடுத்தேன். பொதுத்தேர்வில் 100 மதிப்பெண்கள் எடுத்து அந்தப் பள்ளியில் ஒரு புதிய சாதனை செய்தேன். பொன்னுசாமி சாருக்கு ரொம்ப சந்தோசம். அவர் எல்லாவரிடமும் என்னைப் பற்றி விடாமல் சொல்லிக்கொண்டிருந்தார். எனது வகுப்பில் படித்த 30 மாணவர்களில் 25 பேர் கணக்குப் பாடத்தில் பாஸாகியிருந்தது அவருக்கு மேலும் சந்தோசத்தை அளித்தது.
அதற்குப் பிறகு பொள்ளாச்சியில் ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். ஒருமுறை வழக்கம்போல் வார விடுமுறையில் வால்பாறை சென்றிருந்தபோது ஒரு நண்பன் (ஆனால் ஜூனியர்) என்னிடம், 'பொன்னுசாமி சார் எப்பப் பாத்தாலும் உன்னப் பத்திதான் பேச்சு. அவர் ஒரு மெதேட்ல கணக்குப் போட்டா, அதைவிட ஈசியா நீ வேற மெதேட்ல கணக்குப் போட்டு அவரிடம் காட்டுவியாமா?' என்று கேட்டான்.
ஆனால் எனக்கு அப்படி நடந்ததாக ஞாபகம் இல்லை. இருந்தாலும் எனக்கு சந்தோசம், அவனிடம் 'அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா' என்று ஃபார்மாலிட்டிக்குச் சொன்னேன்.
மாணவர்களை மோடிவேட் செய்யவேண்டும் என்பதற்காக மட்டுமே என்னுடைய ஜூனியர்களிடம் நான் அவரை விட கணக்கு நல்லா செய்வேன் என்று அவர் சொன்னது, சில வருடங்களுக்குப் பிறகுதான் எனக்கு புரிந்தது.
அதுமட்டுமல்லாமல் எங்களது முதல் வகுப்பில் மிக எளிய கேள்விகளை கேட்டதன் நோக்கமும் அப்போதுதான் புரிந்தது.
தன்னைத் தரம் தாழ்த்தி அதன் மூலம் மாணவர்களுக்குப் படிப்பின் மீது ஆர்வம் வரவேண்டும் என்று நினைத்த அந்த ஆசிரியரை இன்று நினைத்தாலும் என் கண்கள் கலங்கிவிடும்.

லலிதா- நீ மட்டும் போதும்....
'யாருன்னு தெரியலியே, 10 மிஸ்ட் கால் வந்திருக்கே' என்று நினைத்துக்கொண்டே பார்த்தால், அப்பாதான் பண்ணியிருக்கிறார்.
'என்ன பிரச்சனைன்னு தெரியலியே, இத்தனை வாட்டி கூப்பிட மாட்டாரே' என்று எண்ணிக்கொண்டே அப்பாவை அழைத்தேன்.
'அப்பா, கூப்பிட்டிருந்தீங்களா'
'ஆமாம்மா, குழந்தைக நல்லா இருங்காங்கல்ல. தம்பி வேலைக்குப் போயிட்டாரா?'
அப்பா பேசுவதிலேயே எதோ பிரச்சனை என்று புரிந்துகொண்டேன்.
'நல்லா இருக்காங்கப்பா, ஸ்கூலுக்கு போயிட்டாங்க. அவரும் வேலைக்குப் போயிட்டார். நீங்க கூப்பிட்டப்ப நான் கிட்சென்ல பாத்திரம் கழுகிட்டு இருந்தேன்ப்பா அதான் கேக்கல. என்னப்பா ஏதாவது பிரச்சனையா'
'ப்ரேமுக்கு கிட்னி பிரச்சனை இருந்துச்சு இல்லியாமா. அது சீரியஸ் ஆயிருச்சு. டாக்டர் உடனே மாத்தி ஆகணும்னு சொல்றாங்க'
'அய்யய்யோ. என்னப்பா சொல்றீங்க? போனவாரம் நல்ல இருக்கான்னு சொன்னீங்களே?' என்றேன் பதறிக்கொண்டு
'தெரியலமா, யூரின் சுத்தமா போகமுடியல. ப்ளட்டா போகுது'
'என்னப்பா பண்றது'
'கிட்னி கெடைக்கலமா. என்னோடதும் அம்மாவோடதும் சேராதாம். அவன் ப்ளட் குரூப் AB நெகடிவ் இல்லியா. அது கெடைக்கறது ரொம்ப கஷ்டமாம்.'
'யாராவது டோனர் இருப்பாங்களேப்பா'
'இருக்காங்கம்மா. ஆனா இது ரேர் குரூப் இல்லியா. கொறஞ்சது பத்து லட்சம் கேக்கறாங்க. அவ்வளவு காசுக்கு எங்கம்மா போவேன்' என்று சொல்லி அழுதார்.
எனது கணவர் இங்கு மத்தியப் பிரதேஷில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவரால் அதிக பட்சம் ஒரு லட்சம் தான் புரட்ட முடியும்.
'என்னப்பா பண்ணலாம்' என்றேன்
'தெரியலமா'
'அப்பா, நான் கொஞ்ச நேரத்துல திரும்ப கூப்பிடறேன்' என்று சொல்லிவிட்டு, கணவருக்கு ஃபோன் பண்ணினேன்.
அவரிடம் விஷயத்தை சொன்னேன். எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, 'ஒரு லட்சம் ரூபாய் நம்ம ரெடி பண்ணிரலாம்' என்றார்.
தயங்கிக்கொண்டே அவரிடம், 'ஏங்க, என்னோட கிட்னிய நான் குடுத்தரட்டா. என்னோட ப்ளட் குரூப்பும் AB நெகடிவ் தானங்க ' என்றேன்.
'அது வந்து….' என்று இழுத்தார்.
'சரி, நான் அப்புறம் கூப்பிடறேன்' என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டேன்
இதுவரை நான் மனது கோணும்படி அவர் நடந்து கொண்டதில்லை. நான் சொன்ன விஷயத்திற்காக அவர் யோசித்தது இதுவே முதல்முறை.
பத்து நிமிடத்தில் அவரிடம் இருந்து ஃபோன் வந்தது. 'ப்ரியா, நீ டொனேட் பண்ணிக்க. நீ குடுக்கலன்னா வேற யார் குடுப்பா. நைட் டிக்கெட் புக் பண்ணிருக்கேன். 8 மணிக்கு ட்ரெயின்' என்றார்.
என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உடனடியாக அப்பாவிற்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னேன். அப்பா முதலில் சம்மதிக்கவில்லை. பிறகு சரி என்று சொல்லிவிட்டார்.
---------------------------
சென்னையில் வருண் ஹாஸ்பிடலில் ஓரளவிற்கு கட்டணம் குறைவாக இருக்கும் என்று அவர் சொல்லியிருந்ததால், அங்கேயே சேர்த்தோம்.
குறைந்தது நாலு லட்சம் தேவைப்படும் என்று சொன்னார்கள். அப்பாவிடம் ஒரு லட்சம் இருந்தது. இன்னும் இரண்டு லட்சம் ரங்கசாமி மாமா கடனாக தருவதாக சொல்லியிருந்தார்.
டாக்டர் வந்து பார்த்துவிட்டு, 'ரெண்டு நாளில் ஆபரேஷன் பண்ணிரலாம், சீஃப் டாக்டர் நாளைக்கு வந்துவிடுவார்' என்று சொன்னார்.
அடுத்த நாள் மாலை நாலு மணிக்கு, 'சீஃப் டாக்டர் ஜெனிஃபர் மேடம் வந்துட்டு இருக்காங்க' என்று சொல்லி ஒரு நர்ஸ் என்னையும் அப்பாவையும் வெளியே அனுப்பிவிட்டார். அம்மா மட்டும் ப்ரேமுடன் இருந்தார்கள்
எல்லா அறைகளும் அமைதியாகிவிட்டன. டாக்டர் தூரத்தில் நடந்து வருவதை பார்த்தேன். மெலிந்த உருவம் பார்ப்பதற்கு நடிகை அமலாவைப் போல் இருந்தார். முகத்தில் கண்ணாடி அணிந்திருந்தார். அருகில் வந்தபோது 'குட் ஈவ்னிங் மேடம்' என்றேன். என்னைத் திரும்பி பார்த்து தலையசைத்தார்.
திரும்பிப் பார்த்தபொழுதுதான் அது லலி என்று தெரிந்தது.
'லலி, எப்படி இருக்கறடீ' என்றேன் அவள் பின்னால் ஓடியவாறு.
அவளும் என்னை அடையாளம் கண்டுவிட்டாள்.
'ப்ரியா, எப்படி இருக்கற? இங்க எப்படி' என்றாள்
விஷயத்தை சொன்னேன்.
அவள் பிறகு வந்து பார்ப்பதாக சொல்லிவிட்டு போனாள். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே பத்து பதினைந்து கால் வந்துவிட்டது, எவ்வளவு பிஸியாக இருக்கிறாள் என்று மலைத்துப் போனேன்.
------------------------------ ---------
நானும் லலிதாவும் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாகவே படித்தோம். என்னுடைய நெருங்கிய தோழி, நெருங்கிய என்பதைவிட வேறு ஏதாவது ஒரு வார்த்தை இருந்தால் அந்த அளவிற்கு பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ்.
ஐந்தாம் வகுப்புவரை அப்பா வேலை செய்த பள்ளியில் தான் படித்தோம். அதற்குப் பிறகு மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தோம்.
எட்டாம் வகுப்பில் படிக்கும்போது, கிறிஸ்மஸ்ஸிற்கு அவளது வீட்டிற்கு அழைத்து இருந்தாள்.
'இதுவரைக்கும் எங்க வீட்ல நீ சாப்பிட்டதே கெடையாது. இந்த தடவை கண்டிப்பா சாப்படணும'
'இல்லடீ, வர்றேன். ஆனா சாப்பாடெல்லாம் வேணாம்'
'ஏண்டீ, எங்க வீட்ல நீங்க சாப்பிட்டா யாராவது ஏதாவது சொல்லுவாங்களா' என்றாள் பரிதாபமாக
'அய்யயோ, எங்கப்பா மேல சத்தியமா அப்டிலாம் ஒண்ணும் இல்லடி'
அன்று வீட்ற்கு சென்று அப்பாவிடம் நிறைய கேட்கவேண்டும் என்று நினைத்தேன். அப்பாவிடம் பேசுவதற்கு அம்மாவும்,தம்பியும் பயப்படுவார்கள். ஆனால் எனக்கு அப்படி ஒன்றும் பயம் இல்லை.
'அப்பா, நீங்கதான எங்களுக்கு தமிழ் கிளாஸ் எடுத்தீங்க?'
'ஆமாம்'
'பாரதியார் கவிதையெல்லாம் சொல்லிக் கொடுத்தீங்க'
'ஹ்ம்ம்'
'அப்புறம் எப்படிப்பா உங்களால ஃபிரெண்ட்ஸ்கிட்ட எதுவும் வாங்கி சாப்பிடக் கூடாதுன்னு சொல்ல முடிஞ்சுச்சு'
'அதுக்கும், இதுக்கும் என்னம்மா சம்மந்தம்'
லலிதா சொன்னதை சொன்னேன்.
'மண்டு. நான் உன்ட்ட சொன்னது தெரியாதவங்க ஏதாவது குடுத்தா வாங்கக் கூடாதுன்னு. அதே மாதிரி ஃபிரெண்ட்ஸ் குடுத்தாலும் வாங்க வேண்டாம்னு ஏன் சொன்னேன்னா, அவங்க ஒவ்வொரு நாளும் ஏதாவது குடுப்பாங்கன்னு நம்மள அறியாம எதிர்பார்ப்பு வந்துரும். அவங்களுக்கு நம்ம மேல வெறுப்பு வர்றதுக்கு அந்த ஒரு காரணம் போதும்' என்றார்.
அவர் என்ன சொல்லவருகிறார் என்று புரியவில்லை என்றாலும் நான் லலிதா வீட்டில் சாப்பிட சம்மதம் தெரிவிக்கிறார் என்று மட்டும் புரிந்தது.
'நீ, தாராளமா அவங்க வீட்ல போய் சாப்பிடு' என்றார்.
லலிதாவிற்கு ஃபோன் பண்ணினேன்.
'ஆண்டி, லலிட்ட குடுங்க'
லலிதாவிடம் கொடுத்தார்.
'ஹாம், சொல்லுடி'
'கிறிஸ்மஸ் அன்னைக்கு மூணு நேரமும் உங்க வீட்ல தான் சாப்பாடு. போதுமா' என்று சொல்லிவிட்டு அப்பாவைப் பார்த்தேன். அப்பா சிரித்தார்.
லலிதாவிற்கு பயங்கர சந்தோசம்.
------------------------------ -------
அந்த லலிதாவை மீண்டும் பார்த்ததில் எனக்கும் சந்தோசம் மட்டுமல்ல. தம்பியின் ஆபரேஷன் பற்றிய கவலையும் போய்விட்டது. எனக்கு அவள்மீது அவ்வளவு நம்பிக்கை.
ஆபரேஷன் செய்வதற்கு முன்னதாகவே பில் கட்டிவிடவேண்டும் என்று சொன்னார்கள். அப்பா ரங்கசாமி மாமாவிற்கு ஃபோன் செய்கிறார். அவர் ஃபோன் எடுக்கவேயில்லை. எங்கள் அனைவருக்கும் கவலைத் தொற்றிகொண்டது.
நாங்கள் பேசுவதைக் கேட்ட ஒரு நர்ஸ், 'ஜெனிஃபர் மேடத்துகிட்ட சொன்னீங்கன்னா அவங்க ரெகமெண்ட் பண்ணுவாங்க. அவங்க ரெகமெண்ட் பண்ணி நெறைய பேருக்கு பில் பாதியா கொறச்சிருக்காங்க. அவங்க ஹெல்ப் பண்ணுவாங்க' என்றார்.
நான் லலிதாவிடம் உதவி கேட்கலாம் என்று முடிவுசெய்தேன். லலிதாவின் உண்மையான பெயர் ஜெனிஃபர் கிறிஸ்டி.
கண்டிப்பாக எனக்காக உதவி செய்வாள் என்று தெரியும். அந்த தைரியத்தில் அவளைப் பார்க்க அப்பாவை அழைத்துக்கொண்டு சென்றேன்.
'மேடம் ஒரு பேஷண்டை பாத்துட்டு இருக்காங்க. அவங்க வந்ததுக்கு அப்புறம் நீங்க போங்க' என்றார் அவரது கன்சல்டிங் அறைக்கு வெளியே இருந்த பெண்.
மனதில் ஒரு சின்ன நெருடல். இத்தனை வருடங்களுக்குப் பிறகு பார்த்திருக்கிறோம். அவள் ஒருவேளை தப்பாக எடுத்துவிட்டாள் என்றால் என்ன செய்வது. அவள் அப்படி நினைக்கமாட்டாள், அவள் எனக்காக எப்போழுதுமே விட்டுக்கொடுப்பவள். அவள் மனதில் அப்படி ஒரு எண்ணம் வரவே வராது. ஆனால் எனக்கு பணத்தைவிட என் லலிதாதான் முக்கியம். லலிதா மட்டும் போதும். என் நகைகளை விற்று பில் கட்டிவிடலாம். அவர்கிட்ட சொல்லி எப்படியாவது சமாளிச்சுக்கலாம் என்று முடிவு செய்தேன்.
'அப்பா வேண்டாம்பா. நாம அவள தொந்தரவு பண்ணக் கூடாது'. என்று அப்பாவிடம் சொல்லி அவரை அழைத்துக்கொண்டு ரூமிற்கு சென்றேன்.
எதிர்பார்ப்போடு காத்திருந்த அம்மாவிற்கு வாடிப்போன எங்களது முகத்தைப் பார்த்தவுடன் விஷயம் புரிந்தது.
என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபொழுது , லலிதாவிடம் உதவி கேட்கச் சொன்ன நர்ஸ் அங்கு வந்தார்.
'மேடம், இந்தாங்க பில் கட்டுனதுக்கான ரெசிப்ட். ஜெனிஃபர் மேடம் உங்க பில்லைக் கட்டீட்டாங்க. நான் சொல்லல அவங்க ரொம்ப நல்லவங்கன்னு'
லலிதாவிற்கு நன்றி சொல்ல ஓடினேன்.. அவள் அங்கு இல்லை.
------------------------------ -------
நாங்கள் இதுவரைக்கும் எந்த விஷயத்திற்காகவும் சண்டை போட்டதில்லை. காரணம் லலிதா அவ்வளவு நல்லவள். எல்லாம் விட்டுக் கொடுத்துவிடுவாள்.
படிப்பிலும் அவள் கெட்டிக்காரி. அவள்தான் எப்பொழுதும் வகுப்பில் முதல் மார்க் எடுப்பாள்.
பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள் பக்கத்து வீட்டு பையன், குட்டி ஓடிவந்து என்னிடம், 'அக்கா, ப்ரேம் அண்ணனும், சிவா அண்ணனும், மோகன் அண்ணனும் சிவா அண்ணன் வீட்ல தண்ணியடிச்சிட்டிருக்காங்க' என்றான்.
அதைக்கேட்டவுடன் ஒருக்கணம் என் உயிரே போய்விட்டது. அப்பொழுது ப்ரேம் பத்தாவதுதான் படித்துகொண்டிருந்தான். அதுமட்டுமல்லாமல், அன்று தண்ணியடிப்பது என்பது மிகக் கேவலமான செயல்.
நானும் லலிதாவும் சிவாவின் வீட்டிற்கு ஓடினோம்.
கதவை தட்டியபொழுது, முதலில் சிவா வந்தான், அதற்குப் பிறகு ப்ரேமும் வந்தான்.
அவன் தலை முடியை பிடித்து ஆட்டியவாறே, 'ஏன்டா, இப்படி பண்ணுன. உனக்கு அப்பா என்னடா கொற வெச்சார்' என்று கத்தினேன்.
என் கையை தள்ளி விட்டுவிட்டு, 'பேசாம வீட்டுக்கு போக்கா' என்றான்.
'என்னடா, என்னையவே அடிக்க வர்றியா'
'நீ பேசாம போயிரு. உன் மேல எனக்கு ஏற்கனவே கோபம். இதுல எதையாவது பேசி என்ன…'
'என்னடா பண்ணுவ. என்னடா உனக்கு என் மேல கோபம். நான் என்னடா பண்ணுனேன் உனக்கு'
'நீ எதுக்கு எனக்கு அக்காவ வந்து பொறந்த'
எனக்கு ஒன்றும் புரியவில்லை.
'நீ, இல்லனா, நானும் சிவா மாதிரி ஜாலியா இருந்திருப்பேன். அவங்க வீட்ல ரெண்டும் பசங்க. ஒரு பிரச்சனையும் இல்ல'
என்னால் அந்த வார்த்தைகளை தாங்கமுடியவில்லை.
'ஏன்டா, இப்படி பேசற. அவ உன் அக்காடா' என்றாள் லலிதா
'நீயும் பேசாமா போயிரு. உன் ஃப்ரெண்ட்டப் போய் எங்கயாவது சாகச் சொல்லு. அப்பத்தான் எனக்கு நிம்மதி' என்றான் அவளிடம்
நாங்கள் ஒன்றும் பேசாமல் திரும்பி வந்துவிட்டோம்.
கிளாஸ்ஸில் அழுதுகொண்டிருந்த என்னிடம் ஏன் அழுகறன்னு மற்ற பெண்கள் கேட்டபொழுது, 'அவள் பேகில் வெச்சிருந்த பத்து ரூபாய காணோம்' என்று சொன்னாள் லலிதா. மற்றவர்கள் முன் நான் அசிங்கப் படுவதை அவள் விரும்பவில்லை.
அப்பாவிற்கு, விஷயம் தெரிந்து, உடனே தஞ்சாவூரிலிருந்து செங்கல்பட்டிற்கு மாற்றம் வாங்கிவிட்டார். அந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை இருந்தது. ஆகையால் நாங்களும் அதே பள்ளியில் அப்பாவின் கண்காணிப்பிலேயே படித்தோம். லலிதாவை விட்டுப் பிரிந்ததை தாங்கமுடியவில்லை, அவளாலும் தாங்க டியவில்லை. காலங்கள் ஓடஓட அது மாறிவிட்டது.
அதற்குப் பிறகு இப்பொழுதுதான் அவளைப் பார்க்கிறேன்.
------------------------------ -------
நான் நினைத்தது போலவே, ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது. நினைவு திரும்பிய பொழுது என்னையும், தம்பியையும் ஒரே அறையில் பக்கத்து பக்கத்து கட்டில்களில் படுக்க வைத்திருந்தார்கள். லலிதாவின் வருகைக்காக காத்திருந்தேன்.
லலிதா வந்தாள். ரிப்போர்ட்களைப் பார்த்துவிட்டு, 'ஒண்ணும் பிரச்சனை இல்லை. ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ் ஆயிறலாம்' என்றாள் அவளது வழக்கமான புன்னகையோடு.
பணம் கட்டியதற்கு இதுவரை அவளுக்கு நன்றி சொல்லமுடியவில்லை.
லலிதா அறையை விட்டு சென்றவுடன் தம்பியைப் பார்த்தேன், அவன் கண்களில் கண்ணீருடன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான்.

------------------------------

ரம்ஜான் - சாமி கை விடல
அபு தாபியின் அரசு நிறுவனங்களில் ஒன்றான Abu Dhabi Gas and Oil Corporation (ADGOC) -ல் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் ஆன நிலையில் அன்று இரவு இஃப்தார் பார்ட்டிக்காக Emirates Palace Hotel சென்றிருந்தேன்.
எங்களுடைய Operation Head ஷெரிஃப் ஒக்பா, என்னை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
"He is Mansoor Hameed... New project manager for our onshore building division. He has more than 12 years of experience. Andddd....He has done his Bachelor of Mechanical Engineering and he is a charted engineer" என்று சுருக்கமாக அறிமுகம் செய்த பிறகு என்னை ஏதாவது பேசச் சொன்னார்.
என்னைப் பற்றி அல்லாது, பொதுவான விஷயம் ஏதாவது ஒன்றைப் பற்றி பேசச் சொன்னார்.
ரம்ஜான் நோம்பினைப் பற்றி பேசினேன். அதனால் ஏற்படும் நன்மைகளையும், நோம்பு துறக்கும்பொழுது எப்படிப்பட்ட உணவுகளை உண்ணவேண்டும் என்பது பற்றியும் அறிவியல் ரீதியிலான விளக்கங்களுடன் பேசினேன்.
அதற்குப் பிறகு, அங்கிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது. ஒருவர் NPOC (National Petroleum and Oil Company)- யில் General Manager ஆக இருப்பதாக சொன்னார்.
இருபது வருடங்களுக்கு முன்பு வாப்பா வேலை செய்த கம்பெனி. அது ஒரு Semi Government Organization. வாப்பா அங்கு staff ஆக வேலைப் பார்த்திருந்தார். உயிரோடு இருந்திருந்தால் இன்று அவரும் ஒரு General Manager அல்லது அதைவிட பெரிய பதவியில் இருந்திருப்பார்.
வாப்பாவின் நெருங்கிய தோழர் அய்யனார் மாமாவைப் பற்றி அவரிடம் விசாரிக்க நினைத்தேன். ஆனால் விசாரிக்கவில்லை
அடுத்த நாள், டிரைவரை அழைத்துக் கொண்டு அந்த கம்பெனிக்கே சென்றுவிடலாம் என்று முடிவு செய்தேன்.
யார் இந்த அய்யனார் மாமா?
நான் எட்டாவது படிக்கும்பொழுது வாப்பா ஊருக்கு வந்திருந்தார். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஊருக்கு வருவார். என் இரட்டை தங்கைகளுக்கு அப்பொழுது ஒன்றேகால் வயது. அவர்களை முதன்முதலில் அப்பொழுதுதான் பார்க்கிறார்.
இரண்டு மாதம் லீவ் முடிந்து திரும்ப போவதற்கு முதல் நாள் ராத்திரி திடீரென்று அவருக்கு ஏதோ ஞாபகம் வர என்னிடம், 'நாளைக்கு காலைல முதல் வேலையாப் போய் நாலு பாக்கெட் திருநீர் வாங்கிட்டு வா' என்றார்.
நானும் வாப்பா எழுவதற்கு முன்னே மாரியம்மன் கோயில் அருகேயுள்ள கடையில் போய் திருநீர் வாங்கி வந்தேன். அதைப் பார்த்த வாப்பா சிரித்தார்.
"ஏன் வாப்பா சிரிக்கிறீங்க" என்றேன்
"இந்தப் பேரப் பாத்தியா?"
"அய்யனார் திருநீர்"
"அய்யனார் மாமா திருநீர் வாங்கிட்டு வரச் சொன்னான். நான் மறந்துருவேன்னேன். அதுக்கு அவன் அய்யனார் சாமி உனக்கு ஞாபகப் படுத்திருவார் போ என்றான். பாத்தியா, அவன் சாமி அவனை கை விடல"
"சாமி நம்பிக்கை நமக்கு இல்லையே வாப்பா?"
"அல்லானா என்னன்னு தெரியுமா?"
"இறைவன்"
"சாமின்னா"
"ஹ்ம்ம்ம்.. இறைவன்" என்றேன் வாப்பா என்ன சொல்லவருகிறார் என்று புரிந்துகொண்டு.
அதற்கு மேல் வாப்பா ஒன்றும் சொல்லவில்லை.
*****
டிரைவர் என்னிடம் "சார், முஸ்ஸஃபா பிரிட்ஜ் வழியா போலாமா இல்லன்னா மக்தாப் பிரிட்ஜ் வழியா
போலாமா?" என்றார்.
"எனக்கு தெரியாதுப்பா, எது ஈஸியோ அந்த வழில போ"
*****
நான் பத்தாவது படிக்கும்பொழுது,
வாப்பாவின் வருகைக்காக காத்திருந்த வேளையில்
வாப்பா இறந்துவிட்டார் என்று தந்தி வந்தது. அவரது உடல் இன்று வரும் நாளை வரும்
என்று ஒரு மாதம் காத்திருந்தோம். கடைசியில் அவரை அங்கேயே அடக்கம் செய்துவிட்டார்கள்
என்று அடுத்த தந்தி வந்தது.
உறவினர்கள் எல்லோரும் சென்று விட்டார்கள். உம்மா மட்டும் அழுகையை நிறுத்தவில்லை, எங்களுக்கு சாப்பாடு பக்கத்துவீட்டு ரஹீம் மாமா வீட்டிலிருந்து ஏதாவது செய்துகொண்டுவந்து கொடுப்பார்கள்.
அன்று உம்மா என்னருகில் வந்து, "மன்சூர், நம்ம அல்லாட்ட போயிரலாமா" என்றார்.
உம்மா சொல்வதைப் புரிந்து கொண்டு சரி என்பதுபோல் தலையை ஆட்டினேன்.
உம்மா அடுத்த வார்த்தை பேசுவதற்கு முன், போஸ்ட் மேன் வீட்டிற்கு வெளியிலிருந்து அழைப்பது கேட்டது.
ஒரு Airmail கவரில் ரெஜிஸ்டர் போஸ்ட் வந்திருந்தது. யாரோ கிருஷ்ணதாஸ் என்பவர் கேரளாவிலிருந்து அனுப்பியிருந்தார்.
பிரித்து சத்தமாக படித்தேன்..
அன்புள்ள தங்கைக்கு,
அண்ணன் அய்யனார் எழுதுவது. குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள். மன்சூர் ஸ்கூலுக்கு போகிறானா?.ஹமீது இறந்ததை எண்ணி எப்பொழுதும் அழுதுகொண்டிருக்காதீர்கள். ஹமீது இறந்த கேஸ் இதுவரை முடியவில்லை. ஆகையால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்க இரண்டாண்டுகள் வரை ஆகலாம்.
என்ன உதவி வேண்டுமானாலும் எனக்கு கடிதம் அனுப்புங்கள். இத்துடன் ஐயாயிரம் ரூபாய்க்கான டிடி அனுப்பியுள்ளேன்.
இப்படிக்கு, அன்புடன் சொ. அய்யனார்
இதைக் கேட்டவுடன் உம்மா, "அல்லா நாம சாகக் கூடாதுன்னு நெனைக்கறார். நீ நாளைக்கே ஸ்கூலுக்கு போ" என்றார்.
"வேண்டாம் உம்மா, நான் அண்ணாச்சி துணிக்கடைல வேலைக்குப் போறேன்"
"இல்ல, நீ படி. நான் வேலைக்குப் போறேன்"
"முடியாது உம்மா, அடுத்த வருஷம் தங்கச்சிகளையும் ஸ்கூலில் சேக்கணும். நீங்க வேலை செஞ்சாப் பத்தாது நான் போறேன்"
ஒருவழியாக அதற்கு உம்மா சம்மதித்தார்.
அடுத்தநாள் உம்மாவை அழைத்துக் கொண்டு நேரத்திலேயே அண்ணாச்சி வீட்டிற்கு சென்றோம்.
அண்ணாச்சி எல்லாம் கேட்டுவிட்டு, "ஏலே, ஸ்கூல்ல போய் டீசி வாங்கிட்டு வந்திடுலே. பின்னால சோலிக்காகும்" என்றார்.
அங்கிருந்து நேராக செயின்ட் ஜோசப் ஸ்கூலிற்கு சென்றோம். அதன் தாளாளர் ஃபாதர் செபாஸ்டியன் சரியான சிடுமூஞ்சி. ஃபீஸ் அடைக்க ஒருநாள் லேட் ஆனாக்கூட வீட்டிற்கு அனுப்பிவிடுவார். ஃபீஸ் கட்டாம டீசி தரமாட்டார் என்று நன்றாக தெரிந்திருந்தும் அவரிடம் சென்றோம்.
உம்மா, அவரிடம் எல்லா விவரங்களையும் சொன்னார். எல்லாவற்றையும் கேட்ட பிறகும் அவரது கண்களில் இறக்கம் என்பது துளிகூட வந்ததாக தெரியவில்லை.
"உன் கிளாஸ் டீச்சர் யார்" என்றார்
"ரெபேக்கா மிஸ்"
ப்யூனிடம், அவரை அழைத்து வரச்சொன்னார்.
மிஸ் வந்தவுடன் வெளியில் சென்று அவரிடம் என்னவோ பேசினார்.
பிறகு உம்மாவிடம் "உங்க பையன் பிளஸ் டூ வரை இங்கயே படிக்கட்டும். ஃபீஸ் ஒன்னும் கட்டவேண்டாம். உங்களுக்கு இங்க ஆயாவா வேலை தர்றோம். மாசம் ஐநூறு ரூபாய் சம்பளம்" என்றார்.
இதைக்கேட்டவுடன் உம்மாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவர் காலில் விழுந்து அவர் காலைப் பிடித்து கண்ணீர்விட்டார்.
அண்ணாச்சியிடம் விஷயத்தை சொல்ல சென்றோம்.
"தெரியும்லே, அதான் அவரப் போய் பாக்கச் சொன்னேன்" என்றார் அண்ணாச்சி சிரித்துக்கொண்டே
****
ஒருவழியாக NPOC வந்து சேர்ந்தோம்.
டிரைவர், செக்யூரிட்டியிடம் எதோ அரபியில் சொல்ல அவர் எங்களை உள்ளே அனுமதித்தார். நாங்கள் சென்றபொழுது மணி இரண்டு இருக்கும். ரம்ஜான் என்பதால் பெரும்பாலானோர் வேலை முடிந்து அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்ததை பார்க்கமுடிந்தது.
வண்டியை பார்கிங்கில் நிறுத்திவிட்டு நாங்களும் நடந்தோம்.தமிழில் பேசியபடி நடந்து வந்துகொண்டிருந்த இளைஞர்களை நிறுத்தி விசாரித்தோம்.
"அய்யனார் என்ற பெயருள்ள staff யாராவது இங்க இருக்காங்களா?"
"இல்ல சார், அப்படி யாரும் இருக்கற மாதிரி தெரியலியே"
"மேனேஜர்?"
"இல்ல சார்.. அப்படி யாரும் இல்லியே"
"ஒரு 65 வயசு இருக்கும் அவருக்கு"
"இல்ல சார்.. அப்படி யாரும் இல்ல. இங்க அறுபது வயசுக்கு மேல விசா ரினியூ பண்ணமாட்டாங்க சார்"
அதற்குள் வேறு ஒருவர் அங்கு செல்வதைப் பார்த்த அதில் ஒருவர், "சார், தா போறாரே. மாரிமுத்து சார் அவருக்கு ஒருவேளை தெரியலாம்" என்றார்.
அவரே, "மாரிமுத்து சார், உங்களுக்கு அய்யனார்னு அறுபத்தஞ்சு வயசுள்ள யாரையாவது தெரியுமா சார்" என்றார் சத்தமாக. திரும்பிப் பார்த்த மாரிமுத்து, "ஆமா. நம்ம பெருசு" என்றார்.
"சார், இவங்கள கொஞ்சம் அவரு ரூம்ல விட்டுருங்க"
அவருடன் எங்களை வரச் சொல்வதுபோல் சைகை செய்தார். நான் டிரைவரிடம், "நான் போய் பாத்துக்கறேன். நீ போய் வண்டில இருந்துக்கோ" என்றேன்.
நான் மாரிமுத்துவுடன் சென்றேன்.
அவர் என்னிடம் எதுவுமே பேசவில்லை.
ஒரு பழைய பில்டிங்கிற்கு அழைத்து சென்றார்.
மாரிமுத்து first floor என்பதால் என்னிடம், "நேராப் போங்க.G18 அவர் ரூம்" என்றார்.
கதவை தட்டினேன். "ஆவ்.. தர்வாஸா
குல்லா ஹே" என்று ஒரு சத்தம் மட்டும் கேட்டது.
கதைவை திறந்தேன். சிறிய அறை. அதில் நான்கு கட்டில்கள் இரண்டு அடுக்காக (bunk bed) இடப்பட்டிருந்தன. ஒரு கொடிக் கயிறு கட்டப் பட்டிருந்தது, அதில் அங்குமிங்குமாக அழுக்குத் துணிகள் கிடந்தன.

கீழே உள்ள கட்டிலில் சுவற்றைப் பார்த்து படுத்திருந்த அந்த முதியவரை 'அய்யா' என்று அழைத்தேன்.
அவரது லுங்கியை சரி செய்தவாறே என்னை திரும்பிப் பார்த்தார்.
"யார் சார் நீங்க?"
அவர் முகத்தில் இருந்த பெரிய மீசை, அது அய்யனார் மாமாவேதான் என்று உறுதிப்படுத்தியது.
"மாமா, நான் மன்சூர். ஹமீது வாப்பா ..." என்று சொல்லி முடிப்பதற்குள் கட்டிலிலிருந்து சட்டென்று எழுந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்.
கட்டிப்பிடித்தவாறே, "உங்க அப்பன மாதிரியே நல்ல ஒசரமா இருக்கியேயா" என்றார்.
நான் ஒன்றும் பேசவில்லை.
என்னை விட்டுவிட்டு என் முகத்தைப் பார்த்து "அம்மா எப்படி இருக்காக, தங்கச்சிகளுக்கு கல்யாணம் ஆயிருச்சா" என்றார்.
"நல்லா இருக்காங்க. ரெண்டு பேருக்கும் நிக்காஹ் ஆயி கொழந்தைகள் இருக்கு"
"ஹ்ம்... உங்க அப்பனும் நானும் இதே ரூம்ல தான் இருந்தோம். அப்ப மூணு அடுக்கு இருக்கும். நாங்க ரெண்டு பேரும் மேலதான் படுப்போம். எள வயசு. இப்ப மேல ஏற முடியாது"
"ஏன் மாமா வாப்பா staff-ஆ இருக்கேன்னு பொய் சொன்னார்"
"உனக்கும், உங்க அம்மாவுக்காவும் தான். நீங்க ரெண்டு பேரும் வருத்தப்படுவீக. நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்னு தான்யா அப்படி சொன்னான்"
அவரே தொடர்ந்தார், "சரியா சாப்பிடக்கூட மாட்டான். அப்ப கம்பெனி மெஸ் இல்ல. வெளில காசு கொடுத்துதான் சாப்பிடணும். டெய்லி குபூஸ் தான் சாப்பிடுவான். மாசத்துல ஒரு நாள் மட்டும்தான் நல்ல சோறு சாப்பிடுவான்"
அதைக் கேட்டவுடன் அபப்டியே இடிந்து போனேன். வாப்பா ஊருக்கு வரும்போதெல்லாம் அது வாங்கிட்டு வாங்க இது வாங்கிட்டு வாங்கன்னு சொல்லிருக்கேனே.
நான் ஒன்றும் பேசமுடியாமல் கட்டிலில் அமர்ந்தேன்.
"ரம்ஜான் மாசம் வந்துச்சுனா மட்டும் டெய்லி காலைலயும் நைட்டும் நல்ல சாப்பாடு பக்கத்துல ஒரு மசூதில இலவசமா கெடைக்கும். அப்ப, உங்கப்பன் சொல்லுவான்; அய்யனாரே அல்லா இந்த ரம்ஜான் மாசம் நம்மள மாதிரி ஏழைகளுக்காக வெச்சிருக்கார்"
அவர் சொன்ன விஷயங்களைக் கேட்டு தொண்டை அடைத்துவிட்டது. அது சரியாக சிறுது நேரம் ஆனது.
"மாமா, நீங்க ஏன் இந்த வயசுலயும் கஷ்டப்படுறீங்க?"
"மூணும் பசங்க. கடைசிப் பையனுக்கு போன வருஷம்தான் கல்யாணம் பண்ணுனோம். மூணு பேரும் அவங்ககூட வந்து இருக்க சொல்றாங்க. உங்க அத்தைக்கு ஒரு மாசம் கூட அவங்க யார் வீட்லயும் இருக்க முடியறதில்ல. அவ மேல தப்பில்ல. அவங்க சிலநேரங்களில் அவங்களை அறியாமல் எங்களைப் பாரமா பாக்கறாங்க. அதுதான்... கொஞ்சம் கடன் இருக்கு. அதை அடச்சுட்டு. கெடைக்கற செட்டில்மண்ட் பணத்த வெச்சு சின்னதா ஒரு கட வெச்சு பொழைக்கலாம்னு இருக்கேன்" என்றார்.
"எவ்வளவு கடன்"
"நாலு லட்சம் இருக்கும்யா"
"மாமா இன்னும் ஒரு மாசத்துல நீங்க இங்க இருந்து இந்தியாவுக்கு போறீங்க. நான் உங்க கடனை அடைக்கறேன். உங்களுக்கு ஒரு கடையும் வெச்சு தர்றேன்"
"ஐயோ, அதெல்லாம் வேண்டாம்யா. நீ சொன்னதே பெருசுயா"
"இல்ல மாமா, நான் ஒத்துக்கமாட்டேன். உங்களாலதான் நாங்க இன்னைக்கு உயிரோடு இருக்கோம்"
'இல்லயா வேண்டாம். அது சரியில்ல.. நான் ஒருநாளும் அத வாங்கமாட்டேன். உன் அன்பு மட்டுமே போதும்'
'முடியாது மாமா, ஒவ்வொரு வருஷமும் நமக்கு தேவை போக மீதம் உள்ள பணத்துல 2.5% ஏழைகளுக்கு ஸகாத் (zakat) கொடுக்கணும்னு இஸ்லாம் சொல்லுது. நான் ஒவ்வொரு வருஷமும் கொடுக்கிறேன். இந்த வருஷம் அதை உங்களுக்கு குடுக்கப் போறேன்"
"உங்க அப்பனும், அதை கரெக்ட்டா கணக்குப் போட்டு ஏழைகளுக்கு குடுப்பான்யா. எனக்கு வேண்டாம்யா"
"இல்ல மாமா, நீங்க வாங்கித்தான் ஆகணும். பெரிய பணக்காரங்க திருப்பதி உண்டியல்ல பணம் போடறது இல்லியா. அது மாதிரி நான் அய்யனார் சாமி கோவில் உண்டியல்ல போடறேன்"
அந்த அறையிலிருந்த ஒரு சின்ன ஷெல்ஃபில் அய்யனார் சாமி படம் வைத்திருந்தார். அந்தப் படத்தைப் பார்த்தவாறே, "பாரு ஹமீது உன் பையனும் உன்னைய மாதிரியே இருக்கான். ஒரு உதவி செஞ்சா பத்து உதவி திரும்ப செய்யற உன் குணம் அப்படியே இருக்கு" என்றார்.
ஃபிரேம் செஞ்சிருந்த அய்யனார் படத்தை உத்துப் பார்த்தேன். வாப்பாவின் பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ அந்த ஃபிரேமின் ஒரு மூலையில் சொருகிவைக்கப்பட்டிருந்தது. ---------
காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்,
ஞாலத்தின் மாணப் பெரிது//
பொண்டாட்டியை சமாளிப்பது எப்படி?
இன்னைக்கு ஒரு பெரிய பிரச்சனை வெடிக்கப் போகுதுன்னு தெரியாம, வழக்கம் போல
ஆஃபிஸ்ல இருந்து வீட்டுக்கு வந்தேன். வந்த உடனேயே ஆரம்பிச்சாச்சு
'ஏங்க , நம்ம அன்னைக்கு மலபார் கோல்ட்ல ஒரு Antique necklace பாத்தோம் இல்லையா, அது நல்லா இருந்துச்சு இல்லீங்களா'
'எப்ப? எனக்கு ஞாபகம் இல்லியே' என்று பொய் சொன்னேன். (அதை எப்படி மறக்கமுடியும், அது வெலையப் பாத்து மயக்கமே வந்திருச்சே எனக்கு)
'இல்லீங்க, போன வாரம் துபாய்ல பாக்கல'
'ஹ்ம், ஆனா அது நல்லா இல்ல. யூஸ் பண்ணுன மாதிரி இருந்துச்சே'
'அது மாடலே அப்படித்தாங்க. அதுதான் இப்ப ஃபேஷன் '
'உனக்கே தெரியும், நம்ம ரெண்டாவது பொண்ணுக்கு வேற நகை சேர்க்கணும். நீ தேவையில்லாம அத இத வாங்க சொல்லாத'
'ஓ எனக்கு வாங்கறது தேவையில்லாதது'
'அப்படி சொல்லல, இப்பத்தான உன் பிறந்த நாளுக்கு கழுத்தோட ஒட்டி இருக்கற மாதிரி ஒரு செயின் வாங்குனோம்'
'கணக்கு சொல்றீங்களா. நானும் கணக்கு சொல்லட்டா'
'ச்சே, என்ன சொன்னாலும் அதுல குற்றம் கண்டுபிடிச்சா என்ன பண்றது'
'எங்க அப்பா, இதுவரைக்கும் நாங்க கேட்டு எதுவும் வாங்கி தரமா இருந்ததில்ல'
சரி இதுக்குமேல பேசுனா பிரச்சனை பெருசாயிரும். அப்புறம் எப்படியும் நகை ரெண்டு நாளைக்குள்ள வங்கிக் குடுக்க வேண்டி வரும். அடக்க நினைக்கறத விட அடங்கிப் போறதுதான் வீரனுக்கு அழகு (இது யார் சொன்னா?). சரண்டர் ஆயிறலாம்னு முடிவு பண்ணீட்டேன்.
'சரி, மூணு மாசம் டைம் குடும்மா. கண்டிப்பா வாங்கித் தர்றேன்'
'சாப்பாடு ஒன்னும் செய்யல'
'இன்னைக்கு நான் சமைக்கட்டா'
'ஓ. ஐஸ் வெக்கறீங்களா?'
'இல்ல, நான் சமைச்சு ரொம்ப நாள் ஆச்சே'
'ஹ்ம்'
பொதுவா பெண்களை ஏமாற்றுவது ரொம்ப சுலபம். அவங்க சொல்லும் போது உடனே முடியாதுன்னு சொல்லக்கூடாது. சரின்னு சொல்லிட்டு அப்புறமா ஏதாவது சாக்கு போக்கு சொல்லி இழுத்தடிக்கலாம்.
ஓகே. மேட்டருக்கு வருவோம். என்ன சமைக்கலாம்னு யோசிச்சேன். முட்டைக் குழம்பு அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். நான் வழக்கமா வைக்குற மாதிரி வைக்காம புதுசா முயற்சி பண்ணலாம்னு முடிவு பண்ணுனேன். அறுசுவை டாட் காம் போய் தேடிப் பாத்தா முட்டைக் குழம்புக்கு மட்டுமே பத்து பதனஞ்சு குறிப்புகள் இருந்தது.
ஒரு குறிப்புக்கு அதிகமா 35 கமெண்ட்கள் விழுந்திருந்தன. சோ அதையே செலக்ட் பண்ணீட்டேன். அருமையா படத்தோட செய்முறைகளை சொல்லியிருந்தார் அந்தக் குறிப்பை வழங்கியவர்.
தேவையானவற்றை எடுத்தபோது ஒரு சிக்கல். லவங்கம்னா என்னன்னு தெரியல. google image search பண்ணினால், ஒவ்வொரு imageலயும் ஒவ்வொரு விதமா இருக்குதே. இங்கி பிங்கி பாங்கி போட்டு ஒன்ன எடுத்துக்கிட்டேன்.
அவங்க சொல்லிருந்த மாதியே செஞ்சிட்டு இருந்தேன். அடுத்த பிரச்சனை கருவேப்பிலை எப்ப சேர்க்கணும்னு எழுதல. என்ன பண்றது? அதுதான் 35 கமெண்ட்ஸ் இருக்கே, யாராவது இதப் பத்தி கேட்டிருக்கமாட்டங்களா. கமெண்ட்ஸைப் படித்தேன்.
கமெண்ட் 1: அக்கா அருமையா எழுதிருக்கீங்க. எங்க அம்மாவும் இப்படித்தான் செய்வாங்க. செஞ்சு பாத்துட்டு எப்படி இருந்துச்சுன்னு நாளைக்கு சொல்றேன்.
கமெண்ட் 2: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
கமெண்ட் 3: செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க
கமெண்ட் 4: உங்க அம்மாவுக்கு எந்த ஊர்
கமெண்ட் 5: நாகர் கோவிலா? அங்கதான் பொதுவா இந்த முறைல செய்வாங்க.
அடக் கடவுளே இப்பத்தான புரியுது எப்படி 35 கமெண்ட்ஸ் வந்துச்சுன்னு. ஆனாப் பாருங்க யாருமே கருவேப்பிலை பத்தி சொல்லல, செஞ்சு பாத்ததுக்கு அப்புறமா யாரும் கமெண்ட் போட்ட மாதிரியும் இல்ல.
செந்தில் மாதிரி ஆளுங்க, ஏதாவது எழுத்தாளர் தும்முனாக்கூட அதுல உள்ள மிஸ்டேக் கண்டு பிடிச்சு நாலு நாளைக்கு திட்டுவாங்க. இது மாதிரி பிழைகளை கண்டுபிடிக்க அவருக்கு டைம் இல்ல பாருங்க. சமூக அக்கறை எனபது கொஞ்சம் கூட இல்லியே. சரி, கருவேப்பில்லையை சாய்ஸ்ல விட்டுட்டேன்.
ஒரு வழியா குழம்பு கொதிக்க ஆரம்பிச்சது. நல்ல மணம். சுவையாவும் இருந்துச்சு. பொதுவா எனக்கு நல்ல கைப்பக்குவம் இருக்கு. இந்த உண்மை எனக்கு என் மனைவி சொல்லித்தான் தெரியும். அதேமாதிரி, நான் மாவு அரைச்சா நல்லா பொங்கி வரும். இதுவும் அவங்க தான் சொன்னாங்க.
குழம்பு இனியும் அஞ்சு நிமிஷம் கொதிக்கவிடலாம்னு விட்டுட்டேன். கிச்சன்ல அப்படியே கைய பின்னாடி கட்டிட்டு அந்நியன் படத்துல லெட்டெர் கொடுத்துட்டு அம்பி நடக்கிற மாதிரி நடந்துகிட்டே பின்வருவனவற்றை யோசிச்சேன்.
இப்படியே போச்சுன்னா இன்னும் ரெண்டு வருஷத்துல மனைவியை சமாளிப்பது எப்படின்னு ஒரு புக் எதுலாம் போலிருக்கே. உமா மகேஸ்வரன், தேன், ப்ரவின் போன்றோர் கல்யாணம் பண்ணுவதற்கு முன்பு அதைப் படித்து பயனடைவார்கள்.
குழம்பு கொதித்தவுடன் அதை எடுத்து வைத்துவிட்டு ஹாலிற்கு சென்று மனைவிக்கு அருகில் அமர்ந்தேன். உக்காந்த உடனேயே அவங்களுக்கு காமுகிட்ட இருந்து ஃபோன் வந்துச்சு.
'சொல்லு காமு'
'யாருடி இன்னைக்கு சமைச்சா?' (எனக்கும் நல்லாவே கேட்டுச்சு)
'அவருதான் இன்னைக்கு சமையல். நல்லா சமைப்பார்டி' (இவங்களா சொல்ற மாதிரி ஒரு பில்ட்-அப்)
'எப்படிடி அண்ணனை ஏமாத்தி சமைக்க வெச்ச'
இவங்க எந்திருச்சு பெட்ரூம் போயி, 'அவரு Antique necklace வாங்கித் தர்றேன்னு சொல்லிருக்கார்டி' என்றார்
ஏம்பா, யாரவாது பொண்டாட்டிகிட்ட ஏமாறாமல் இருப்பது எப்படிங்கற புக் இருந்தா வாங்கி அனுப்புங்கப்பா.

நண்பேன்டா....
சிறுவயதில், அப்பாவிற்கும் போலிஸ் மாமாவிற்கும் இடையே இருந்த நட்பைக் கண்டு பலமுறை வியந்துள்ளேன். இதுபோன்ற நண்பர்கள் நமக்கும் கிடைக்க மாட்டார்களா என்று ஏங்கிய காலங்களும் உண்டு.
ஆனால் கல்லூரிப் பருவத்தில் அவர்களது அதே நட்பு எனக்கு செயற்கையாக தோன்றியது. அவர்களைவிட நானும் எனது நண்பர்களும் உண்மையாக இருப்பதை உணர்ந்தேன்.
அப்பா அவரை 'போடா தடியா' என்று சொல்வது, அவர் அப்பாவை 'போடா குண்டா' என்று சொல்வது, ஏதோ மற்றவர்களுக்கு அவர்கள் நண்பர்கள் என்று தெரிவிப்பதற்காக போலியாக செய்வதுபோல் இருந்தது. அப்பா செய்கின்ற பல விஷயங்கள் எனக்கு வித்தியாசமாக தோன்றும், அவற்றில் இதுவும் ஒன்று.
என்னுடைய நண்பர்கள் அப்படி இல்லை. உதாரணத்திற்கு சாம் (Sam). அவனுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் என்னை அறியாமல் துடித்துவிடுவேன், அவனும் அப்படித்தான். இருந்தாலும் வெளியில் அப்படியெல்லாம் இருவருமே காட்டிக்கொண்டது கிடையாது. சாம் மட்டுமல்ல, இப்படி பல நண்பர்கள் உள்ளனர்.
காலங்கள் ஓடியது. அப்பாவும் போலிஸ் மாமாவும் மாறவே இல்லை. என் பார்வையில் அதே செயற்கையான நட்பு. அவர் இல்லாமல் எங்கள் வீட்டில் எந்த நல்லது கெட்டதும் நடக்காது, அதே போல் அவர்கள் வீட்டின் எல்லா விசேஷத்திற்கும் அப்பா முதல் ஆளாக சென்றுவிடுவார்.
எனது கல்யாணத்திற்கு அவர் குடும்பத்திலிருந்து யாரும் வரவில்லை. நாங்களும் கல்யாண வேலைகளில் அவரை மறந்துவிட்டோம். அடுத்தநாள் அப்பாவிற்கு திடீரென அவரது நியாபகம் வர, அவரின் மொபைலில் தொடர்பு கொண்டார். ஸ்விட்ச் ஆஃப். லேன்ட்லைனில் அழைத்தபொழுது, மாமா வெளியே சென்றிருப்பதாக சொன்னார் அவரது உறவினர்களில் ஒருவர்.
ஃபோனில் பேசியதால் அப்பாவிற்கும், அம்மாவிற்கும் ஓரளவிற்கு நிம்மதி. இருந்தாலும் அடுத்த நாள் அவர்கள் வீட்டிற்கு செல்லலாம் என்றார் அப்பா.
காலையிலேயே அப்பா, அம்மா, நான், மனைவி நால்வரும் பொள்ளாச்சியிலிருந்து பல்லடம் சென்றோம். அவரது வீட்டின் முன்பு கார் நிறுத்துவதைப் பார்த்ததுமே அத்தை ஓடிவந்து,
'அண்ணா, சிந்து (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இப்படி பண்ணிருச்சேண்ணா... இதுக்குத்தான் அவர் ஆசைப்பட்டதெல்லாம் வாங்கிக்கொடுத்து வளர்த்தாரா?' என்று அழுதார். எங்களுக்கு ஓரளவிற்கு விஷயம் புரிந்துவிட்டது.
அப்பா, 'சரிம்மா, விடும்மா பரவாயில்லை' என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார். நாங்களும் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு உள்ளே சென்றோம்.
மாமா இருந்த அறைக்குள் அப்பா சென்றவுடன், 'ராஜா, நம்மள ஏமாத்திட்டுப் போயிருச்சுடா" என்று கதறி அழுதார்.
'விடுப்பா, விடுப்பா" என்றார் அப்பா. அப்பாவிற்கு அதற்குமேல் ஒன்றும் பேசமுடியவில்லை. அப்பாவும் அம்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதால், அப்பாவிற்கு அது ஒரு பெரிய விஷயம் இல்லைதான். இருந்தாலும், தன்னுடைய நண்பர் அழுவதை அவரால் தாங்கமுடியவில்லை.
ஒருவழியாக அவர்களை ஓரளவிற்கு சமாதானம் செய்துவிட்டு திரும்பினோம்.
அந்த விஷயத்தைப் பற்றி அதற்குப் பிறகு அப்பா ஒரு வார்த்தைகூட பேசவில்லை.
பொதுவாக நமது நண்பர்களுக்கு ஏதாவது பிரச்சனை (உதவி தேவை அல்ல) என்றால் உடனே நாம் மற்ற நண்பர்களிடம் அதைச் சொல்லி வருத்தப்படுவோம். அதனை நாம் சிந்தித்துப் பார்த்தால், நண்பர்களின் பிரச்சனையை மற்றவர்களிடம் பகிர்வதில் அறிந்தோ அறியாமலோ நாம் சற்று ஆனந்தம் அடைவோம். அதே சமயம் அப்படி ஒரு சம்பவம் நமது குடும்பத்தில் நடந்தால் அதை வெளியே சொல்வதில்லை.
அம்மாவிடம் கூட அதனைப் பற்றி அப்பா பேசவில்லை. அவருக்கு தன்னுடைய நண்பன் அவமானமாகக் கருதிய விஷயத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள முடியவில்லை .
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

இன்னா செய்தார்.....
எனது இரண்டாவது மகள் பிறந்து ஐந்தாவது நாள் அவருக்கு passport apply செய்ய
BLS போனேன். அபு தாபியில் இந்தியன் passport மற்றும் விசா வழங்கும் சேவையை
BLS நிறுவனமும், attestation போன்ற சேவைகளை IVS Global நிறுவனமும்
செய்கின்றன. இந்த இரண்டு நிறுவனங்களும் அடுத்தடுத்து உள்ளன (அடுத்தடுத்து
என்றால் சுமார் 200m தொலைவில்).
8 மணிக்கு திறப்பார்கள் என்று தெரிந்துகொண்டு ஏழேமுக்கால் மணிக்கே சென்றேன். எனக்கு முன்பாகவே வந்த சிலர் அங்குமிங்குமாக அமர்ந்திருந்தனர். நான் புத்திசாலித்தனமாக கதவிற்கு முன்பு ஒரு queue form செய்யும் நோக்கத்தில் நின்றேன். நான் நினைத்தது போலவே உடனே இரண்டு பேர் வந்து என் பின் நின்றார்கள். சில நிமிடங்களில் அது பத்து பதினைந்து பேராக மாறியது.
சரியாக, 8 மணிக்கு திறந்தார்கள். முதல் ஆளாக token வாங்குவதற்கு சென்று நின்றேன். அவர்கள் பொதுவாக நமது documents-ஐ சரிபார்த்துவிட்டு token தருவார்கள். ஒரு மலையாளி lady நான் கொண்டுபோயிருந்த documentகளை பார்த்துவிட்டு, 'சார், உங்க மனைவி பாஸ்போர்ட்ல உங்க பேர் இல்லை' என்றார்.
நான் ஏதோ முதன்முறையாக பாஸ்போர்ட் apply செய்ய வந்ததாக நினைத்துவிட்டார் போல.
நான் கோபமாக, 'என்னோட பாஸ்போர்ட்ல அவங்க பேரு இருக்கே அது பத்தாதா' என்றேன்.
'இல்ல சார், இரண்டு பேர் பாஸ்போர்ட்லயும் spouse name வேண்டும். இல்லன்னா, உங்க marriage certificate, home department-ல attestation செய்யப்பட்டிருக்கணும்' என்றார்.
இவர்கள் இப்படித்தான் தேவையில்லாமல் அலைக்கழிப்பார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும்.
நான் விடவில்லை, இன்னும் சத்தமாக 'நீங்க என்ன நெனச்சுட்டு இருக்கீங்க?, அப்புறம் எப்படி என் மூத்த பொண்ணுக்கு இந்தியால பாஸ்போர்ட் குடுத்தாங்க. Emirates Post இந்த சேவையை செஞ்சிட்டிருந்த வரை எந்தப் பிரச்சனையும் இல்லை.நீங்க வந்ததற்கு அப்புறம் தான் இவ்வளவு பிரச்சனை. புதுசு புதுசா ரூல்ஸ் சொல்றீங்களே' என்றேன்.
'எங்களுக்கு இப்படித்தான் embassy-யிலிருந்து சொல்லிருக்காங்க' என்றார்.
'சும்மா, நீங்க வாயில சொல்றதெல்லாம் என்னால ஒத்துக்க முடியாது. எழுத்துல வேணும் ஒன்னு அவங்க அனுப்புன circular-அ காமிங்க, இல்ல நீங்க எழுதித் தாங்க' என்றேன்.
விடாமல் கத்திக்கொண்டே இருந்தேன்.
எனக்கு பின்னால் நின்றவர்களுக்கு என்மேல் கோபம், இருந்தாலும் நான் கோபத்தில் கத்திக்கொண்டிருந்ததால் ஒன்றும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள்.
அதற்குள் வேறு ஒருவர் அங்கு வந்தார். அவரிடம் அந்த lady விஷயத்தை சொன்னார். அவர் கூலாக ஒரு பேப்பரை எடுத்து தந்தார் அதில் அவர்கள் சொன்னது போலவே எழுதியிருந்தது.
அவர் என்னிடம், 'உங்க wife-ஐக் கூட்டிக்கிட்டு IVS Global போங்க, அவங்க ரெண்டு பேரோட ஃபோட்டோவும் ஒட்டி sworn affidavit தருவாங்க. அதை வாங்கிட்டு இங்க வாங்க' என்றார்.
மனைவியை அழைத்துவர வீட்டிற்கு கிளம்பினேன். சுமார் முப்பது கிலோமீட்டர். வீட்டிற்கு சென்று மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு வந்தேன். வருகின்ற வழியிலேயே ஸ்டுடியோ சென்று மனைவியின் ஃபோட்டோவும் எடுத்துக் கொண்டு போனோம்.
அந்த இடத்திற்கு சென்றபொழுது மணி பத்தாகிவிட்டது. அருகில் எங்கும் பார்க்கிங் கிடைக்கவில்லை. அரைக் கிலோமீட்டர் தொலைவில் ஒரு பார்க்கிங் கிடைத்தது. பாப்பாவை, அப்படியே பேபி கார் சீட்டோடு தூக்கிக்கொண்டேன்.
நான் வேகமாக முன்னே பாப்பாவைத் தூக்கிக்கொண்டு நடந்து கொண்டிருந்தேன். மனைவியோ மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தார். அந்த அலுவலகத்திற்கு சென்று அவர்களையும் நன்றாக திட்டவேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டே நடந்தேன். எத்தனையோ பாவப்பட்ட இந்திய தொழிலாளர்களை இவர்கள் எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறார்கள். இவர்களை இன்று சும்மா விடக்கூடாது. யாருமே கேள்வி கேட்கவில்லை என்றால் இவர்களது அராஜகத்திற்கு அளவில்லாமல் போய்விடும் என்று நினைத்து என்னுடைய கோபத்தை அதிகப்படுத்தினேன்.
நான் அந்த அலுவலகத்திற்கருகில் சென்றவுடன் மனைவியை திரும்பி பார்த்தால் அவர் வெகு தொலைவில் மெதுவாக நடந்துவந்து கொண்டிருந்தார். அவர் எனது அருகில் வந்தபோது அவர் கண்களில் கண்ணீர் வழிந்ததைப் பார்க்கமுடிந்தது.
'நடக்க முடியலீங்க' என்றார் அழுதுகொண்டே.
அதைக்கேட்டவுடன் எனது கோபம் மறைந்து, முகத்தில் சோகம் தொற்றிக்கொண்டது.
அலுவலகத்தின் உள்ளே சென்று token வழங்கும் பெண்ணிடம் விஷயத்தை ஆங்கிலத்தில் சொன்னேன். அபயா (பர்தா) அணிந்திருந்த அந்தப் பெண் மலையாளத்தில், 'குழந்தை பிறந்து எத்தனை நாள் ஆகிறது?' என்று கேட்டார்.
'அஞ்சு நாளாகுது' என்றேன்.
அதைக்கேட்டவுடன் அவர் எனது மனைவியைப் பார்த்தார். அவரது கண்களில் வழிந்த நீரைப் பார்த்துவிட்டு சட்டென்று எழுந்து எங்கள் இருவரையும் ஒரு கவுன்டருக்கு அழைத்துச் சென்றார். 'முப்பது நாள் வரை மனைவி வரத் தேவயில்லை' என்று சொன்னார். 'இல்ல ma'am, BLS -ல் மனைவியோடு போணும்னு சொன்னாங்க' என்றேன்.
கவுன்டரில் இருந்த பெண்ணிடம் அவர் விஷயத்தை சொல்லவும், அவர் 'படச்சோனே (அல்லா), எதுக்கு இவங்களக் கூட்டிட்டு வந்தீங்க' என்று அவர் பங்கிற்கு கேட்டார்
அவர் முன்பு நின்றிருந்த customer-ஐ போய் அமரச் சொல்லிவிட்டு ஒரு application எடுத்து எங்களிடம் sign மட்டும் வாங்கிக்கொண்டு அவரே fill-up செய்தார். அதுமட்டுமல்லாமல், அவரது அதிகாரியிடம் நேரடியாக அவரே சென்று கையெழுத்தும் வாங்கி வந்தார். ஐந்து நிமிடத்தில் எல்லா வேலைகளும் முடிந்தது. அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அப்படியே token வழங்கும் பெண்ணிற்கும் நன்றி சொல்லிவிட்டு வந்தேன். அப்பொழுது அவர், 'வந்ததே வந்துட்டீங்க அப்படியே BLS போங்க, அவங்ககிட்ட விஷயத்த சொல்லுங்க. வெயிட் பண்ணவேண்டி வராது' என்றார்.
BLS அலுவலகத்திற்கு மெதுவாக நடந்து சென்றோம். token வழங்கும் இடத்தில் கூட்டம் இல்லை. அங்கிருந்த நபரிடம் விஷயத்தை சொன்னேன்.அவரும் என் மனைவியைப் பார்த்துவிட்டு உடனடியாக என்னை ஒரு கவுன்டருக்கு அழைத்து சென்றார். அவர் அழைத்து சென்ற கவுன்டருக்கு அருகில் இருந்த கவுன்டரில் காலையில் வழக்கிட்ட பெண் அமர்ந்திருந்தார்.
அவர் என்னைப் பார்த்துவிடுவாரா என்ற பயத்தில் நெஞ்சம் படபடத்தது. ஒவ்வொரு வினாடியும் அவர் பார்த்துவிடுவாரோ என்று பயந்து கொண்டே என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.
வேலை முடிந்தது, அவர் என்னைப் பார்க்கவேயில்லை. ஆனால், என்ன நினைத்தேனோ என்னமோ நேராக அவரிடம் சென்றேன்.
'ஸாரி சிஸ்டர்' என்று மட்டுமே சொல்லமுடிந்தது. அதற்குமேல் பேசமுடியாமல் மளமளவென்று கண்ணீர் பெருக்கடுத்தது.
"பரவாயில்லை சார். நீங்கள் ஏதோ கோபத்துல பேசிட்டீங்க. நீங்களும் மலையாளி (என்னை மலையாளி என்று நினைத்துவிட்டார்) நானும் மலையாளி. என்னோட சகோதரன் என்னைத் திட்டினால் பரவாயில்லை' என்றார்.
'டெலிவரி ஆகி அஞ்சு நாள் தான் ஆகுது. wife-க்கு நடக்கக்கூட முடியல. அதான் அவரைக் கூட்டிட்டு வரணும்னு கேட்டப்ப கோபப்பட்டுட்டேன்' என்று கோபப்பட்டதற்கு ஒரு பொய்யான காரணத்தை கண்ணீர் வழிய சொன்னேன்.
'கர்த்தாவே, நீங்க கோபப்பட்டதற்கு ஏதோ காரணம் இருக்கும்னு நெனச்சேன். அது உண்மையா போயிருச்சே. பரவாயில்லை நீங்க கவலைப்படாம wife-அ பத்திரமா கூட்டிட்டு போங்க. அஞ்சு நாள்ல பாஸ்போர்ட் கெடச்சுரும்' என்றார் உண்மையான அன்போடு
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்.

காதலில் கலக்குவது எப்படி?
நானும் எங்க அக்காவும் பத்தாம் வகுப்பு படிக்கும்போது நடந்த சம்பவம். எங்க அக்காவும் நானும் எப்படி ஒரே வகுப்புல படிச்சோங்கறது வேற ஒரு கதை. அத அப்புறம் சொல்றேன்
பொதுவா நாங்க ரெண்டு பேரும் ஒன்னாத்தான் உக்காந்து படிப்போம். ஆனா நைட் நான் சீக்கிரமே தூங்கப்போயிருவேன். அது மாதிரி ஒரு நாள் நான் தூங்கப்போயிட்டேன். அக்கா மட்டும் படிச்சிட்டு இருந்திருக்கு.
(கொஞ்சம் தூரத்து) சொந்தத்துல ஒரு மாமாவின் பையனான ராதா அண்ணனை (சின்ன வயசுல இருந்து அப்படியே கூப்பிட்டு பழகிட்டோம்) அக்கா லவ் பண்ணீட்டிருந்துச்சு . அது எனக்கு நல்லாவே தெரியும், ஆனா எனக்கு தெரியுங்கறது அவங்க ரெண்டு பேருக்கும் அப்ப தெரியாது. சரி கதைக்கு வருவோம்.
அக்கா, அன்னைக்கு ராதா அண்ணனுக்கு லவ் லெட்டெர் எழுதிட்டு இருந்திருக்கு...
அன்புள்ள ராதா அண்ணனுக்கு,
உங்கள் அன்பு ப்ரியா எழுதுவது.. ..............................
..............................
..............................
எழுதிட்டிருந்தபோது, அக்கா என்ன பண்ணுதுன்னு பாக்க அம்மா போயிருக்காங்க. அக்கா லெட்டெர் எழுதிட்டிருக்கறதப் பாத்துட்டு என்னம்மா இதுன்னு கேட்டிருக்காங்க. அக்கா அதை வேக வேகமாக கசக்கி கையில் இறுக்கமாக வைத்துக்கொண்டது.
எல்லா அம்மாக்களையும் போல எங்க அம்மாவும் ஒரு அப்பாவி. அம்மாவுக்கு நாங்க ரெண்டு பேருமே பயப்படமாட்டோம். அம்மாவை ஈசியா ஏமாத்திருவோம். கேட்டு தராததால் அம்மா அப்பாகிட்ட சொல்லப்போறேன்னு சொல்லிட்டு அப்பாவ கூப்பிட வந்தாங்க.
அப்பா, அம்மாவ திட்டிகிட்டே தூக்கத்துல இருந்து எழுந்திருச்சு, ரெண்டு பேருமா அக்கா படிச்சிட்டிருந்த ரூமுக்கு போயிருக்காங்க.
அப்பா அக்காகிட்ட, என்னம்மா எழுதிட்டு இருந்தன்னு கேட்டார்.
ஒன்னும் இல்லப்பான்னு அக்கா சொல்லுச்சு.
பொய் சொல்லதான்னு அப்பா கோபமா கத்தினார்
இல்லப்பா, ஒன்னும் எழுதலன்னு திரும்பவும் சொல்லுச்சு.
அப்பா, வலுக்கட்டாயமா அந்த லெட்டெர வாங்கி படிச்சார்.
படிச்சிட்டு, கோபமா அம்மாவைப் பாத்து நீயெல்லாம் ஒரு மனுஷியான்னு கேட்டார்.
இந்தா இதப் படி... படிச்சிட்டாவது இனிமேல் இப்படி நடந்துக்காதன்னு சொன்னார்
நானும் அன்னைக்கு அப்பா கூடத்தான் தூங்கிட்டு இருந்தேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அக்கா இந்த விஷயத்த என்கிட்ட சொல்ற வரைக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே எனக்குத் தெரியாது.
எனக்கும் உங்களை மாதிரியே சந்தேகம் வந்துச்சு. "உன்னத் திட்டவே இல்லியா! அம்மாவ அப்பா எதுக்குக்கா திட்டுனார்"-ன்னு அக்காகிட்ட கேட்டேன். அப்பா எந்திருச்சு வர்றதுக்கு லேட் ஆகும்னு தெரியும் லெட்டர மாத்திட்டேன்னுச்சு பாருங்க.
சரி.. எப்படி அந்த லெட்டெர் மாத்தப்பட்டிருந்துச்சுன்னு பாப்போம்
அன்புள்ள முருகனுக்கு, //அக்காவோட இஷ்ட தெய்வம் முருகன்//
ப்ரியா எழுதிக்கொள்வது. எங்க அம்மாவுக்கு என்னைப் பிடிக்கறதே இல்லை. அம்மாவுக்கு தம்பிய மட்டும்தான் பிடிக்கும். அவனை திட்டவே மாட்டாங்க, எதுக்கெடுத்தாலும் என்னையேதான் திட்டுவாங்க. நான் எதுக்கு உயிரோட இருக்கணும். நான் செத்ததுக்கு அப்புறமாவது அம்மாவுக்கு என் மேல பாசத்த வரவையுங்க.....................
..............................
(பிகு: அக்காவுக்கும் ராதா அண்ணனுக்கும் கல்யாணம் ஆகி பதனஞ்சு வருஷம் ஆகுது. அம்மாவுக்கு, இன்னும் இந்த விஷயம் தெரியாது. அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுனதும் தெரியாது)
Subscribe to:
Comments (Atom)