Saturday, September 14, 2013

ஜாலியா ஒரு போஸ்ட்

'என்னடா ஆச்சு உனக்கு? ஏன்டா இப்படி இருக்கற?'

'ஒன்னும் ஆகலியே, நான் நல்லாத்தான் இருக்கேன்'

'என்னடா ப்ராப்ளம், ப்ளீஸ் ஸ்பீக் அவுட்'

'எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல, நீதான் என்ன அவாய்ட் பண்ற'

'நானா? நான் எதுக்கு உன்ன அவாய்ட் பண்ணனும்? தெளிவா சொல்லு'

'போன வாரத்துல நான் மொத்தம் இருபது ஸ்டேட்டஸ் போட்டுருந்தேன், ஆனா நீ ஒரே ஒரு ஸ்டேட்டஸுக்கு மட்டும்தான் லைக் பண்ணிருந்த'

'டேய், இதெல்லாம் ஒரு விஷயமா. நான் இப்பெல்லாம் ஃபேஸ்புக் அவ்வளவா பாக்கறது இல்ல, அதான்'

'பொய் சொல்லாதடீ.. எனக்கு எல்லாம் தெரியும். அவ்வளவா பாக்காமயா ராஜா போட்டிருந்த பத்து ஸ்டேட்டஸுக்கு லைக் பண்ணிருந்த. அக்ரமோட மூணு ஸ்டேட்டஸுக்கு லைக் பண்ணிருந்த. அவினாஷ் போட்டிருந்த ஏழு ஸ்டேட்டஸுக்கு லைக் பண்ணுன. ஏன், மாங்கா மாமா போட்டிருந்த முப்பத்தஞ்சு ஸ்டேட்டஸுக்கு லைக் பண்ணிருந்தியே.. அதுல மூணு ஸ்டேட்டஸ்ல கமெண்ட் வேற போட்டிருந்த.. இப்ப சொல்லு இதுதான் நீ அதிகமா ஃபேஸ்புக் பாக்காததா'

'இத இப்ப ஏன் ஒரு விஷயமாக்கறன்னுதான் புரியல'

'உனக்கு புரியாது. மத்த பசங்க மாதிரி நான் சந்தேகப்படறவனா இருந்திருந்தா இந்நேரம் உன்ன வேவு பாத்திருப்பேன். நான் கேசுவலா எடுத்துக்கிட்டேன் இல்லியா. அதான் உனக்கு எளக்காரமாப் போச்சு'

'இந்த மாதிரி சில்லி திங்க்ஸ்கெல்லாம் பிரச்சனை பண்ணாதடா'

'எதுடீ சில்லி திங். என்ன நீ அவாய்ட் பண்ணுவ. நான் பொறுமையா இருக்கணுமாக்கும். நீ லைக் பண்ணுன என்னோட அந்த ஸ்டேட்டஸையும் படிச்சிருக்க மாட்டன்னு எனக்கு நல்லாத் தெரியும்'

'இல்ல படிச்சிட்டுத்தான் லைக் பண்ணுனேன்'

'பொய் சொல்லாத. அது என்ன ஸ்டேட்டஸ்ன்னு சொல்லு பாக்கலாம்'

'உங்க அம்மாவப் பத்தி எழுதிருந்த'

'பாத்தியா.. எங்க அம்மா இல்லடி அது, முதல்வரைப் பத்தி எழுதிருந்தேன். டைட்டில் அம்மாங்கறத மட்டும் படிச்சிருக்கற'

'தெரியும். நாங்க கலைஞர் கட்சி. அதான் உங்க அம்மான்னு சொன்னேன்'

'சமாளிக்காத. உனக்கு என் ஸ்டேட்டஸ் படிக்கறதுல என்ன பிரச்சனைன்னு தெரியல. என்ன வெறுக்க ஆரம்பிச்சுட்டேங்கறது மட்டும் நல்லாத் தெரியுது'

'டேய், உண்மைய சொல்லணும்னா, நீ எழுதற ஸ்டேட்டஸ் எதுவுமே படிக்கற மாதிரி இல்லடா. அதுவும் நீ எழுதற என்னமோ ஒரு குறுங்கதைகள் இல்ல... அது கன்றாவியா இருக்குதுடா'

'கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை. க்ரியேடிவா எழுதுனா உங்களுக்குப் புடிக்காதே. நம்ம 'பின்னால் மின்னல் எழுத்தாளர் மருதநாயகம்' என்னோட ரெண்டு கதைய அவர் ப்ளாக்ல போட்டு அது அமெரிக்க எழுத்தாளர் டொனால்ட் டக் எழுதற மாதிரியே இருக்குன்னு பாராட்டியிருக்கறார். இதெல்லாம் உனக்கு எங்க தெரியப் போகுது'

'அந்த ஆளுக்கு ஒரு பீடிக் கட்டு வாங்கிக் குடுத்தா போதுமே, உனக்கு புக்கர் பரிசே வாங்கிக் குடுத்துருவாரே'

'சும்மா நிறுத்து. என்னோட ஒவ்வொரு ஸ்டேட்டஸையும் கொறஞ்சது நாலு பேராவது ஷேர் பண்றாங்க. தெரியுமா உனக்கு'

'என்னடா நீ சொல்ல வர்ற'

'நீ இன்னும் என்ன புரிஞ்சுக்கலடீ. என்னப் பத்தி உனக்கு என்ன தெரியும். என்னோட அக்கௌன்ட் ஒப்பன் பண்ணிப் பாரு புரியும். யூசர் நேம் P A A M B A T T I பாம்பாட்டி டாட் S I T H A N சித்தன் அட் ஜிமெயில் டாட் காம், பாஸ்வோர்ட் U M அட் M A G E S H W A R அட் N'

'எனக்கு இது தெரியும்'

'ரூமுக்குப் போய் ஒப்பன் பண்ணிப் பாரு, நாலு பொண்ணுங்க எனக்கு மெசேஜ் அனுப்பிருப்பாங்க. நான் யாருக்குமே ரிப்ளை பண்ணலியே. இத்தனைக்கும் அவங்க யாருமே அப்படி வழியற கேஸுக இல்ல. அவங்க ப்ரொஃபைல் ஃபுல்லி செக்யூர்ட். அவங்க ஃப்ரண்ட்ஸ் யார் யாருன்னு கூட பாக்கமுடியாது. ஏய், அதுல ஒரு பொண்ணு பத்தாம் க்ளாஸ்தாண்டி படிக்குது. சின்னப் பொண்ணுடி. நான் என்ன அவ்வளவு கேவலமானவா? புரிஞ்சுக்கோ'

'இத ஏன்டா என்ட்ட சொல்ற. தேவை இல்லாம இப்ப இமோஷனல் ஏன் ஆகற.'

'இல்ல. எனக்கு என்ன நிரூபிக்கறதுக்கு வேற வழி தெரியல'

'நீ எதுக்கு நிரூபிக்கணும். நான் உன்ன ஒன்னும் கேக்கலியே'

'நீ சந்தேகப்பட்டறக் கூடாது இல்லியா, அதான்'

'ஓ அப்படி. அப்புறம் எதுக்கு நாலு நாளைக்கு முன்னாடி காவ்யாகிட்ட, ஒரே நாள்ல வழிய வழியப் போய் உன் நம்பரக் குடுத்த. அந்த சேட்டை டிலீட் வேற பண்ணீட்ட. அந்த காவ்யா என்னோட ஃப்ரண்ட் தான் தெரியுமா? '

'எந்த காவ்யா? ஓகே ஓகே. அந்தப் பொண்ணு ரொம்ப டீசண்டா தெரிஞ்சது அதனால தான் குடுத்தேன். ஷீ இஸ் ரியலி டீசண்ட் யூ நோ?'

'அவ டீசண்ட் தான். ஆமா, உனக்கு மெசேஜ் அனுப்புன அந்த நாலு பொண்ணுங்கதான உன்னோட ஸ்டேட்டஸ் எல்லாம் ஒன்னு விடாம ஷேர் பண்ணுதுங்க'

'ஆமாம். ஓ அவங்க ப்ரொஃபைல்ல போய் செக்கிங் நடந்துருக்கோ. இப்பவாவது என்னப் புரிஞ்சுக்கோ'

'ஃபேக் ஐடிகளக் கூட புத்திசாலித்தனமா வெச்சுக்க தெரியல, நீ க்ரியேடிவிட்டி பத்தி பேசற. அது எப்படி அந்த பொண்ணுங்க நாலு பேரும் சொல்லி வெச்ச மாதிரி வேற எதையும் போஸ்ட் பண்ணாம உன்னோட ஸ்டேட்டஸ்ஸ மட்டும் ப்ரொஃபைல் ஆரம்பிச்சதில இருந்து ஷேர் பண்ணிட்டு இருக்காங்க.'

'உனக்கு ரொம்ப புத்திசாலின்னு நெனப்போ... அவங்க வேற ஸ்டேட்டஸும் போடறாங்க. பட் , ஒன்லி ஃப்ரண்ட்ஸ்தான் பாக்கமுடியும்.'

'நீ அவங்களுக்கு ஃப்ரண்ட் தான. நான் பாத்தது உன்னோட ப்ரொஃபைல்ல இருந்துதான். அப்புறம் இன்னொரு விஷயம். காவ்யா என்னோட ஃபேக் ஐடிதான், சோ நீ எப்படி வழிவேன்னும் எனக்கு நல்லாத் தெரியும்'
**************************************************************

பின்குறிப்பு: கமெண்ட்ல யாராவது 'இதுல ஏதாவது உங்க சொந்த அனுபவத்தோட பாதிப்பா'ன்னு கேட்டு என் பொண்டாட்டிய ஜெயிலுக்கு அனுப்பிறாதீங்க.

No comments:

Post a Comment