தம்மைத் தரம் தாழ்த்திய ஆசிரியர்....
கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறையில்தான் நான் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். வால்பாறை அரசு மேல்/உயர்நிலைப் பள்ளி. அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பத்து சதவீதம் மாணவர்கள் பாஸாவதே பெரிய விஷயமாக இருந்தது அன்று. ஒன்பதாம் வகுப்புவரை எப்படியோ கஷ்டப்பட்டு எல்லாப் பாடங்களிலும் பாஸாகி வந்தேன்.
பத்தாம் வகுப்பு போனபோது 'எப்படிடா பாஸ் பண்ணப் போகிறோம்' என்று மனதில் பெரிய கவலை இருந்தது. குறிப்பாக கணக்குப் பாடத்தை நினைக்கும்போது தான் அதிக பயம். நான் படித்தது 'B' section- ல். 'A' section ஆக இருந்தால் எப்படியும் பாஸ் பண்ணிவிடலாம். காரணம் அண்ணாமலை சார், அவர்தான் அந்த section -க்கு கணக்கு ஆசிரியர். அவர் எல்லா மாணவர்களையும் அடித்துப் படிக்க வைத்து பாஸ் பண்ண வைத்துவிடுவார். அவர் 35 மார்க்குகளுக்கு மட்டுமே பாடம் சொல்லிக்கொடுப்பார்.
B section-க்கு ஒரு டீச்சர், அவங்க பேர் மறந்து போச்சு. ரொம்ப அழகா இருப்பாங்க. எங்க கெட்ட(?) நேரம் அந்த வருஷம் அவங்களை வேற section -க்கு மாத்திட்டாங்க. அவருக்கு பதிலாக பொன்னுசாமி சாரை நியமித்திருந்தார்கள். பொன்னுசாமி சாரைப் பத்தி எங்க சீனியர்ஸ் யாரும் பெரிதாக ஒன்றும் சொன்னது கிடையாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கணக்கு வகுப்பிற்காகக் காத்திருந்தோம்.
அவர் எங்களிடம் கேட்ட முதல் கேள்வி, "எந்த subject உங்களுக்கு ரொம்ப கஷ்டம்?"
எல்லோரும் கோரஸாக "maths (மேக்ஸ் என்று படிக்கவும், அப்பொழுது மேத்ஸ் என்று சொல்லவேண்டும் என்று தெரியாது)" என்றோம்.
"அப்படியா" என்று கேட்டுவிட்டு போர்டில் 10 கணக்குகளை எழுதி எங்களிடம் விடை எழுதுமாறு சொன்னார்.
அன்று பெரும்பாலோனோர் 7 மார்க்குகளுக்கு அதிகமாக எடுத்திருந்தோம் (மொத்தம் பத்து மார்க்குகள்).
"எல்லாரும் நல்ல மார்க் வாங்கி இருக்கீங்களே, உங்களுக்கு maths கஷ்டம் என்பதை நம்ப முடியவில்லை" என்றார்
அவரது வகுப்புகள் ஒவ்வொன்றும் மிகவும் இண்டரெஸ்டிங் ஆக இருக்கும். ஒவ்வொரு பாடத்தையும் அதன் பயன்பாட்டிலிருந்து ஆரம்பிப்பதுதான் அதற்குக் காரணம். அதாவது முதலில் அந்த கணக்கு வாழ்க்கையில் எங்கே பயன்படும் என்று சொல்லிவிட்டு தான் பாடத்தை நடத்துவார். புரிந்து படித்தல் என்பதை அப்பொழுதுதான் முதன் முதலில் கத்துக்கொண்டேன் (அதுதான் புரிந்து படிக்கறதுன்னு அப்போது தெரியாது)
பொன்னுசாமி சார் எப்பொழுதும் அவருடைய பழைய மாணவர் இப்ராஹீமைப் பற்றி சொல்லிக் கொண்டே இருப்பார். 20 வருடங்களுக்கு முன்பு அவரிடம் படித்த மாணவர் இப்ராஹிம். அவர் கணக்குப் பாடத்தில் 90 மதிப்பெண்கள் வாங்கியிருந்ததுதான் அதுவரை அந்தப் பள்ளியில் சாதனை. பொன்னுசாமி சார் அவரைப் பற்றி அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்ததால், எங்க எல்லோருக்கும் எப்படியாவது இப்ராஹீம் போல நாமும் படிக்கவேண்டும் என்ற ஆசை எப்போதுமே இருந்து வந்தது.
காலாண்டுப் பரீட்சை வந்தது. கணக்கில் நல்ல மார்க் வாங்குவேன் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. பரீட்சை முடிந்து ஒவ்வொரு பாடத்தின் மதிப்பெண்களும் கொடுக்க ஆரம்பித்தார்கள். ஆவலுடன் எதிர்பார்த்த கணக்குப் பரீட்சை மார்க் கிடைத்தது, 92 மதிப்பெண்கள் வாங்கியிருந்தேன். அன்று வரை என் வாழ்க்கையில் அவ்வளவு சந்தோசம் அடைந்தது கிடையாது. அந்த முகம் தெரியாத இப்ராஹிமை விட அதிக மதிப்பெண்கள் வாங்கிவிட்ட சந்தோசம். எப்படியாவது பொதுத்தேர்வில் அதைவிட அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டு என்று மனதில் நினைத்துக் கொண்டேன். ஆனால் என்னுடன் படித்த மற்ற மாணவர்கள் யாரும் அவ்வளவு மார்க் வாங்கவில்லை. இருந்தாலும் பொன்னுசாமி சாருக்கு நான் நல்ல மதிப்பெண் வாங்கியதால் ரொம்ப சந்தோசம்.
அரையாண்டுத் தேர்வுக்கு முன்பு எல்லாப் பாடங்களையும் முடித்துவிட்டார். அதில் நான் 99 மதிப்பெண்கள் வாங்கியிருந்தேன். என்னைவிட அதிகம் சந்தோஷப்பட்டது பொன்னுசாமி சார்தான். பேப்பரைக் கொடுத்து முடித்தபின் என்னை வெளியே அழைத்துச் சென்றார்.
அங்கு என்னிடம் அவர், 'ப்ரவிண், நீ எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும்' என்றார்.
'என்ன சார்?' என்று கேட்டேன்.
'நாளையிலிருந்து நீதான் க்ளாஸ் எடுக்க வேண்டும்'
'ஓகே சார்'
'நான் சும்மா இருக்கலாம்ன்னு நெனச்சுட்டு உன்ன க்ளாஸ் எடுக்க சொல்லல. நீ க்ளாஸ் எடுத்தால் உனக்கு எல்லாப் பாடங்களும் தெளிவாகிவிடும். அதுமட்டுமில்லாமல் உன்னோட க்ளாஸ்மேட்ஸ் உன்னிடம் தைரியமாக சந்தேகம் கேட்பார்கள்'
'சரி சார்'
'உனக்குப் பிரச்சனை ஒன்னும் இல்லியே? விருப்பம் இல்லைன்னா வேண்டாம்',
'இல்லை சார், எனக்கு சந்தோசம் தான்'
அன்றிலிருந்து அந்த வருட கடைசி வரை நான் தான் க்ளாஸ் எடுத்தேன். பொதுத்தேர்வில் 100 மதிப்பெண்கள் எடுத்து அந்தப் பள்ளியில் ஒரு புதிய சாதனை செய்தேன். பொன்னுசாமி சாருக்கு ரொம்ப சந்தோசம். அவர் எல்லாவரிடமும் என்னைப் பற்றி விடாமல் சொல்லிக்கொண்டிருந்தார். எனது வகுப்பில் படித்த 30 மாணவர்களில் 25 பேர் கணக்குப் பாடத்தில் பாஸாகியிருந்தது அவருக்கு மேலும் சந்தோசத்தை அளித்தது.
அதற்குப் பிறகு பொள்ளாச்சியில் ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். ஒருமுறை வழக்கம்போல் வார விடுமுறையில் வால்பாறை சென்றிருந்தபோது ஒரு நண்பன் (ஆனால் ஜூனியர்) என்னிடம், 'பொன்னுசாமி சார் எப்பப் பாத்தாலும் உன்னப் பத்திதான் பேச்சு. அவர் ஒரு மெதேட்ல கணக்குப் போட்டா, அதைவிட ஈசியா நீ வேற மெதேட்ல கணக்குப் போட்டு அவரிடம் காட்டுவியாமா?' என்று கேட்டான்.
ஆனால் எனக்கு அப்படி நடந்ததாக ஞாபகம் இல்லை. இருந்தாலும் எனக்கு சந்தோசம், அவனிடம் 'அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா' என்று ஃபார்மாலிட்டிக்குச் சொன்னேன்.
மாணவர்களை மோடிவேட் செய்யவேண்டும் என்பதற்காக மட்டுமே என்னுடைய ஜூனியர்களிடம் நான் அவரை விட கணக்கு நல்லா செய்வேன் என்று அவர் சொன்னது, சில வருடங்களுக்குப் பிறகுதான் எனக்கு புரிந்தது.
அதுமட்டுமல்லாமல் எங்களது முதல் வகுப்பில் மிக எளிய கேள்விகளை கேட்டதன் நோக்கமும் அப்போதுதான் புரிந்தது.
தன்னைத் தரம் தாழ்த்தி அதன் மூலம் மாணவர்களுக்குப் படிப்பின் மீது ஆர்வம் வரவேண்டும் என்று நினைத்த அந்த ஆசிரியரை இன்று நினைத்தாலும் என் கண்கள் கலங்கிவிடும்.

No comments:
Post a Comment